உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

109

உள்ளத்தைச் சுழலவிட்டது. அவன் மடத்தைவிட்டு வந்தபின் திரிந்த நாடுகள், கண்ட காட்சிகள், செய்த போர்கள், அதில் அவன் பெற்ற விருதுகள் அவன் உள்ளத்தைத் துளைத்தன. இ எல்லாம் செய்தும் யாது பயன்? யார் மதித்தென்ன? மதியாது போயென்ன? தன்வாழ்வில் இனிக் குறிக்கோளற்றவன். நோக்கமற்றவன் ஆனோமே என்று எண்ணி ஏங்கினான்.

'மீண்டும் வாரைனைக் காண - அவள் நட்பைப் பெறமுயற்சி செய்யலாமா?' என்று அடிக்கடி கேட்டது அவன் உள்ளத்தினுள் ஒளிந்திருந்த ஆவல். அறிவு விடை தந்தது; ‘அதனாற் பயனென்ன, பேதை மூரட்! உனக்கு நாக்குக் கடுநாக்கு. உயர்குடியினரிடம் பேச உயர்குடி நங்கையரை வசப்படுத்த-அந்நங்கையரசியைக் கனிவிக்கப் போதிய இனிய நயம் உனக்கு ஏது? உன் தோற்றம்! கோமாளிகளில்கூட நீ நல்ல கோமாளியல்லவே! உன் உயர்குடி வாழ்வு - உன் கலை இவை அணுகப் போதும் - வெறுப்பைச்சிறிது மாற்றப் போதும். அதற்குமேல் அவாக் கொள்ளாதே!' அவா பின்னும் கூறிற்று: 'கிடைப்பதில்லை என்று தெரிந்து விட்டால், பின் முயற்சி செய்து பார்ப்பதில் தவறென்ன? வந்தால் வராது வேறு வருகிறது. வராவிட்டால் அதனால் வரும் புதிய கேடு ஒன்றுமில்லையே. ஆகவே போய்ப் பார்.’

இவ்வூசலாட்டங்களுக்கிடையே அவன் கண்ணடைத்தது. அவன் எப்போது கண்ணயர்ந்தான் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால், பலகணி வாயில் வழி கதிரவனொளி அவன் படுக்கைமீது பரவும்வரை அவன் தூங்கிக்கொண்டுதான் இருந்தான்.