உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

111

வேட்டைகளும் உண்மையில் உயிர் பலிகொள்ளும் விலங்கு வேட்டைகளல்ல. பிற நாட்டரசரை வென்று அவர்

நாடுகளையோ செல்வங்களையோ கொள்ள எண்ணாமல், புகழ் அறுவடை மட்டும் நாடிய பண்டை அரசர் போல, அவன் தன் ன்பப் பொழுது போக்கு மட்டும் நாடி, வண்டுகள் போல் மலருக்கு மலர் தாவினான். மலர்கள் அதனால் கேடுறவில்லை - பயன்பெற்றன என்பதை வண்டு கவனிக்காவிடினும்,அது வண்டின் பண்பை உயர்த்துவதாகவே இருந்தது. அவன் செய்த போர்களும் பிழைப்பு - செல்வம் - ஆட்சி உரிமை நாடிய போர்களல்ல. காதல் - - விளையாட்டைப்போல் அதுவும் அவனுக்கு ஒரு வீர விளை யாட்டாகத் தானிருந்தது. ஆனால், காதல் விளையாட்டில் உள்ளூர இருந்த உள்ளக் கனிவு போலவே இங்கும் அவனிடம் இயற்கையான ஓர் உள்ளார்வம் இருந்து செயலாற்றிற்று. எந்தப் போரிலும் அவன் ஆதிக்கக்காரர் பக்கம் நின்று போரிடவில்லை. கவிஞன் பைரனைப் போல, அடிமைப்பட்ட மக்களுக்காகவே அவன் போராடினான். ஆகவே, அவன் போர் வீரம் காரணமாகப் பெற்ற பதக்கங்கள், அவன் போர் வீரத்துக்கு மட்டும் சின்னங் களாயமையவில்லை. அவன் விடுதலை யார்வத்துக்கும் சின்னங்களாயமைந்தன. மேலும் அவன் போர்ச் செயல்கள் குருதி கொப்புளிக்கும் செயல்களோ கொடுமை நிறைந்த செயல்களோ ஆக அமையவில்லை. தன் நேச நாட்டினராயினும் சரி, எதிரி நாட்டினராயினும்சரி, போர் வீரர் அல்லாத இடத்தில் அவன் தாக்கியதில்லை. போர் செய்யாத போதும் தாக்கியதில்லை. அடைக்கலம் புகுந்தவரை அவன் கைவிட்டது கிடையாது. பெண்டிர், குழந்தைகள் ஒரு தமையனிடம் ஒரு மாமனிடம் அகப்பட்டால் எப்படி நடத்தப் பெறுவரோ அப்படித்தான் நடத்தப்பட்டனர். போரின் குழப்பத்தைப் பயன்படுத்தி மாதரை அவன் துன்புறுத்தியதோ உள்ளங் கலங்கச் செய்ததோ அரிது.

இத்தனையும் லாரைனுக்கு அவனைக் காணும் சமயத்தில் தெரியாது. ஆனால், அவனைக் கண்டது முதல் அவள் தப்பெண்ணங்கள் குறையாமலிருக்க முடியாது. காதலுக்கென, அன்புக்கென, நட்புக்கென பண்பட்டிருந்த அவள் கலையுள்ளம் முன் ஒரு கணவனிடம் மட்டுமே நட்புப்பெற்றது.குழந்தைகளிடம் மட்டுமே அன்புக்கு ஒரு புகலிடம் கண்டது. ஆனால், காதலுக்குரிய அவள் உள்ளத்தின் ஏழைமை நிரம்புகளும்