உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(116)

II-

அப்பாத்துரையம் - 30

மூரட் கலையுள்ளமும் அதனை விஞ்சிக் காதலுள்ளமும் ன்ப உணர்ச்சியினால் துடிப்புற்றது. "அம்மணி அதை எழுதியது யார் என்பதைத் தாங்கள் அறிந்து கூறுகிறீர்கள் என்றே நினைக்கிறேன்” என்றான்.

லாரைன், “அவர் உள்ளத்தை அறிகிறேன். ஆனால், அவர் யார்,பெயரென்ன என்பதை அறியேன். அறிந்தால் கட்டாயமாக அவர் நட்பை நான் விரும்புவேன். நீங்கள் அறிவீர்களா?”

மூரட்டினால் சிரிக்காமலிருக்க முடியவில்லை.

அவளுக்கு உண்மையினைப் பற்றிய ஐயம் சிறிதே நிழலாடிற்று.

66

‘அதை எழுதியது ஒருவேளை நீங்களாயிருக்குமோ?'

"தங்கள் உள்ளத்தின் ஏற்பை உணர்ந்தபின் 'நானே தான்’ என்று மகிழ்ச்சியுடனும் சற்றுப் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். நான் மடத்தின் துறவியாகப் பயிற்சி பெறும் நிலையில் எழுதியதால் புனை பெயருடன் வெளியிட்டேன். ஆனால், அப்படியும் அது நான் என்பது பலருக்கும் தெரிந்து விட்டது. வால்த்தேர்கூட அந்நூலைப் பாராட்டினாராம். ஆனால், இப்பாராட்டுகளின் விளைவு விசித்திரமானது. பாரிஸ் அரண்மனை வாயில் எனக்கு அடைக்கப்பட்டது அதனாலே தான்.”

லாரைன் கையிலிருந்த தூரிகை சட்டெ ன கீழே விழுந்தது. அவள் எதிர்பாராத தின்பண்டம் பெற்ற குழந்தைபோலக் கைகளைக் கொட்டி “ஆ, அலைனின் ஆசிரியர் நட்பை நான் ஏற்கெனவே பெற்றுவிட்டதற்காக மகிழ்ச்சி. ஆயினும் முதலில் மூரட்டாகவே தங்களை வரவேற்கிறேன். அலைனின் ஆசிரியராக மீண்டும் ஒருமுறை உங்களை மனமார வரவேற்கிறேன். தங்கள் கலை ஒளி அடிக்கடி என் சிறு குடிலில் வந்து ஒளியூட்டவேண்டும் என்பது என் மனமார்ந்த விருப்பம். இங்கே நீங்கள் விருந்தினராக வருவதாக எண்ண வேண்டாம்! இதை இனி தங்கள் இல்லமாகப் பாவிக்க” என்றாள்.

காணும் மகிழ்ச்சி மட்டுமேயேற்று அத்துடன் ஆர்வத்தை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற டி லீஞ்ஞின் பரிந்துரை ஏற்று வந்த மூரட் காணும் மகிழ்ச்சி கடந்து நெருங்கிய