உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

121

தடங்கலின்றிப் பேசிக் கொள்ளப்பட்டன. இறந்த காலத்தில் உலவி,நிகழ்காலம் அளாவி, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணமற்ற தாயிருந்தது அவர்கள் ஊடாட்டம்.

லாரைன் அலைனின் ஒவ்வொரு வரியையும் ஒரு நூறு தடவை படித்திருந்தாள். எல்லாரிடமும் அவள் அதனை மேற்கோள் காட்டுவது வழக்கம். அலைகள் ஆசிரியரிடம் அதனை மேற்கோள் காட்டுவதில் அவளுக்குச் சிறிது நாணம் இருந்தது. ஆகவே, அவள் “அலைனின் ஆசிரியரைக் காண முடியுமா? கண்டால் எவ்வளவு நற்பேறு என்றுதான் நான் முன்பெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன். கண்ட பிற்பாடு கூட முதலில் இது ஓர் அரிய வாய்ப்பாயிற்று என்றுதான் எண்ணினேன். ஆனால், இப்போது எண்ணுகிறேன் - அலைன் ஆசிரியர் நீங்கள் என்று தெரிந்திருந்தால் நான் தங்கள் நட்பை விரும்பியிருக்க மாட்டேன்” என்றாள்.

மூரட்: ஏன் அப்படி?

லாரைன்: நான் என் அலைனிலிருந்து மேற்கோள் காட்ட முடியாதல்லவா?

மூரட்: ஏன் காட்ட முடியாது? தன் நூலிலிருந்து மேற்கோள் காட்டப்பெறும் வரை விரும்பாத கலைஞன் இருப்பானா?

லாரைன்: கலைஞன் விரும்பலாம். ஆனால், மேற்கோள் காட்டுபவர்களுக்கு அதில் என்ன மனநிறைவு கிடைக்கும்? எதிரிக்குத் தெரியாத தெரியாத புதிதான ஒன்றைப்

ஒன்றை

பேசுவதிலல்லவா அவை இருக்கக்கூடும்.

மூரட்: தாங்கள் பேசுவது எதுவானாலும் எனக்குப் புதிதாகவே இருக்கும்.

லாரைன் முகம் இவ்வாசகத்தினால் நாணமிகுந்து சிவந்தது. அவள் முகத்தைச் சிறிது திருப்பிக் கொண்டாள். அவன் அதை மாற்ற மேலும் "தங்கள் உரையாடற்கலை கலைக்கும் கலைப்பண் பூட்டும்" என்றான்.

காதல் அம்புகளிலிருந்துகூடத் தன்னைக் காத்த அந்நட்பு அவளை மிகவும் வயப்படுத்திற்று. "இவ்வளவு இனிய கற்பனைகளை, இவ்வளவு நயமிக்க அறிவுப் பண்பை நீங்கள் எவருக்கும் தெரியாமல் இதுவரை எங்கே மறைத்து வைத்துக்