(122)
||--
அப்பாத்துரையம் - 30
கொண்டிருந்தீர்கள்? தங்களை நான் முன்பே கண்டு பழகியிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்” என்றாள்.
தன் பேச்சின் போக்கு தன் உள்ளத்தைத் திறந்து காட்டுவதுடன் நிற்கவில்லை - தன் உள்ளத் திரைக்குப் பின் அறைகுறையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு மறை செய்தியையும் வெளிப்படுத்திவிடத் தக்கதாகும் என்று அவள் கண்டாள். கண்டு பேச்சை உடனே மாற்றினாள்.
"தாங்கள் நண்பர்களைப் பற்றியெல்லாம் மிகவும் பேசுகிறீர்கள். பகைவர்களாக எவரையும் குறிப்பிடவில்லை. தங்களுக்குப் பகைவர்களே கிடையாதென்று நினைக்கிறேன்.”
மூரட்: ஏன் கிடையாது? மடத்துத் துறவியரில் பெரும் பாலார் என்னை வெறுப்பவர்கள்தாம். தங்களைப் போன்ற அரண்மனை வாணர்களில் தாங்கள் நீங்கலாக எவரும் என் கூட்டுறவுக்கு இடந்தர மாட்டார்கள்.
லாரைன்: துறவியர் ஏன் தங்களைப் பகைக்க வேண்டும்?
மூரட்: நான் துறவியாகப் பயிற்சி பெறவிருந்தவன் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களே!
லாரைன் உண்மையில் அவர் மடத்தில் கல்விப் பயிற்சி பெற்றர் என்றே நினைத்திருந்தாள். காதல் வேடராகிய மூரட் ஒரு துறவியாக விருந்தார் என்ற எண்ணம் அவளைக் குலுங்கக் குலுங்க நகைக்க வைத்தது. அதுபற்றிய விவரங்களையெல்லாம் அவள் முழுதும் கேட்டாள். பின் அரண்மனை வாணர் தங்களைப் பகைப்பானேன் என்று பின்னும் புதுத் தூண்டுதல் தந்தாள்.
ஆக்டேவ் மூரட், தான் பாதையிற் பிறந்த பாலன் என்பதையும், தாயின் தங்கு தடையற்ற போக்கிலேயே தான் வாழ்ந்த வகையையும் கூறினான்.
லாரைன் அவன் கைகளைத் தன் கைகளால் பற்றிக் கனிவுடன் “அன்பரே, நம் இருவர் நேசமும் இப்போது முழு நிறைவுடையதாகிறது. நான் வெளிப் பார்வைக்கு வேறு வகைப் பட்ட. சூழ்நிலையில் பிறந்தாலும் பிறப்பு முதல் இன்றுவரை தங்களைப் போல அன்புக்கும் அறிவாதரவுக்கும் அலைந்தவளே!” என்று கூறித் தன் குழந்தை காலத் துன்பங்கள், அப்பாவிச் சிறுமியான தன் தமக்கையின் துன்பமிக்க வாழ்வு, முடிவு, ஒரு சிறு