வாடா மல்லி
மேவி மிளிராமே!
மேனியாள் மென்சாயல் மேவி மிளிராமே!
நீடிய புகழ் ஒளி
நிகரறு பெருந்திரு
நேரினும் என்ன பயன்? நிறைவினுக் குயிர்தரும் நீள்திரு நங்கைதன் நினைவதிற் சாராமே! நீள்திரு நங்கைதன் நினைவதிற் சாராமே!!
ஆண்மையும் வீரமும்
ஆள்வுறு சூழ்ச்சியும்
ஆளினும் என்ன பயன்?
ஆரணங்கோர் ஆண்மை
133
அவாவுறும் ஆரணங்கு ஆட்கொண் டருளாமே!!
அவன் பாடினான். அவள் யாழ் நரம்புகள் பாடின. அவள் உடலின் நரம்புகளும் உடன்பாடின. ஆனால், அப்பாட்டில் அவனைப் பற்றிய உணர்ச்சிகள் எதுவும் அவனுக்குக் காணப் படவில்லை. பாடலில் அவன் எழுப்பிய வினாக்களுக்கு அவள் தந்த விடை அவ்வினாக்களின் எதிரொலிகளே என அவனுக்குத் தோற்றிற்று.
அந்நிகழ்ச்சியின் பொருள் இன்று அவனுக்கு விளங்கிற்று. அவன் இதை நினைந்து இன்றும் ஒரு பாடல் எழுதினான். இது காதல் பற்றிய பாடலே, ஆனால், இன்றைய காதல் துறை வேறு. அது காதல், ஊடல் எல்லை கடந்து அவன் உள்ளக் குமுறலைச் சித்திரித்தது. அது அவள்மீது குற்றச் சாட்டுத் தெரிவித்தது.
பாவியல் காதலி ஓவியந் தீட்ட