134
உவந்து முனைந்தனளே! ஓவிய மாதிரி
உயிர்கொண் டியங்கிற்று! ஆனால்,
ஓவியக் காதலில்
உயிரது தானில்லை!
பாவியல் காதலி பல்வண்ணந் தீட்டிப் பலபட மயங்கினளே! ஆவியின் மெய்வண்ணம் எவ்வண்ணம் அறிகிலாள்! ஆனால்,
பல்வண்ணத்தே அங்கே மெய்வண்ணம் தானில்லை! பாவியல் காதலி காதல் வரைந்தனள் நட்பெனும் சட்டத்திலே! நட்பு நகைத்தது காதல் பதைத்தது ஆனால்,
நல்ல அச்சட்டத்தில் நற்படம் தானில்லை!
அப்பாத்துரையம் - 30
பாட்டு அவனுக்குக்களிப்பூட்டியது,குற்றச்சாட்டுஅவனுக்கு ஆறுதலளித்தது. அதைக் கண்டு அவள் அடையும் உளப்பாடு, மெய்ப்பாடுகளை எண்ணிப் பார்க்க அவனுக்குச் சிறிது ஊக்கம் பிறந்தது. பாட்டைத் திருத்தமாக ஒரு தாள் நறுக்கில் எழுதிச் சட்டைப் பையினுள் வைத்துக் கொண்டான்.
கடைசி இருப்பு மிக எளிதில் முடிவுற்றது. அன்று மூரட் எதுவும் வாயாடவில்லை. அவளும் முழுதும் படத்திலேயே கருத்துச் செலுத்தினாள். ஒருமுகப்பட்டு நெடுநேரம் உழைத்த