138) ||-
அப்பாத்துரையம் - 30
அவள் திடுக்கிட்டாள். பேச்சின் போக்கு தனக்கு எதிராகத் திரும்பிவிட்டது என்பதையும், தன் சொல்லாலேயே தான் அதற்கு இடங்கொடுத்து விட்டதையும் அவள் கண்டு கொண்டாள். சிறிது தயங்கி நின்று, பின் “உங்களுக்குக் காதல், வாழ்க்கை நிகழ்ச்சிகளாகிய சங்கிலித் தொடரில் ஒரு கண்ணி; வாழ்க்கைப் புகழாரத்தில் ஒரு புகழ் மலர்; ஒரு தற்காலிகச் செய்தி. எனக்கு அது ஒரு மனிதர் வாழ்வில் ஒரே தடவை நிகழக்கூடிய புயல்.'
மூரட் : ஆம், அதை நான் இப்போதுதான் உணர்கிறேன்.
மூரட்டின் குரல் அவன் உள்ளார்ந்த போராட்டத்தின் விளைவால் தழுதழுத்து விம்மிற்று. அவளுடைய உள அமைதி கலைவுற்றது. ஆயினும், அவள் வெளிக்கு அதைக் காட்டிக் கொள்ளாமல், “தங்கள் சொற்களில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றாள்.
மூரட்: எதனால்?
லாரைன் : காதலைப்பற்றிய தங்கள் எண்ணத்தை எல்லாரும் அறிவார்கள். உங்கள் காதற் பாடல்களில் பலவற்றை நானும் அறிவேன். எடுத்துக்காட்டாக,
துடியிடை சூழ்கரம் அணைக்கவே,
வெடிபட வெம்மொழி தடுக்கவே, வெடுக்கென எடாக்கனி எடுத்தல்போல் இனிப்பதிவ் வுலகினில் யாதரோ?
இப்பாட்டு உங்கள் உள்ளத்திலிருந்து எழுந்ததுதானே! நீங்கள் இப்போது கூறியது ஓருணர்ச்சியில், ஒரு நேரத்தில். அது வேறோர் உணர்ச்சியில் வேறொரு நேரத்தில், அவ்வளவுதானே!
மூரட்டின் முகம் சுண்டிற்று. அவன் சிறிது நேரம் பேச முடியாது கல்லாய்ச் சமைந்தான். ஆனால், அவன் கடுந்துயரை அந்த மௌனம் தெளிவாக எடுத்துக் காட்டிற்று. எங்கே அவன் பேச்சு மட்டுமன்றி மூச்சும் அற்றுவிட்டதோ என அவள் அஞ்சினாள்.
அவள் உறுதி கலையவில்லை. ஆனால், உள்ளங்கனிவுற்றது. அவனுக்கு இச்சமயம் விட்டுக்கொடுத்தாக வேண்டும் என்று