வாடா மல்லி
143
ஆனால், அவன் லாரைனுக்கு நேரெதிராக, ஆனால் சற்றுச் சாய்முகமான இடத்தில் சென்றமர்ந்து கொண்டான். இதனால் மற்ற எவரும் கவனியாதபடியே அவன் அவளைக் காணவும் அவள் அழகைக் கண்டு பருகவும் முடிந்தது. லாரைன் அவன் சூழ்ச்சித் திறம் கண்டு பொருமினாள். ஆனால், அவளால் நேரிடையாக அவனைக் கண்டிக்க முடியவில்லை, அவனைக் காதலனாகத் தான் நடத்த முடியாதாதலால், அவன் மீது கோபப்படவும் வழியில்லை. தன் நட்புறுதி அவனுக்குப் போதிய கட்டுப்பாடு தராமல், தன்னையே கட்டுப்படுத்துகிறது என்பதை உணர்ந்த அவள் உள்ளூரத் தன்னையே கடிந்துகொண்டாள். அதே சமயம் அவன் பார்வையில் தன் உள்ளம் உண்மையில் ஈடுபட்டு மகிழ்வதை அவன் முகத்தில் நிறமாறுதல் எடுத்துக்காட்டு வதையும் அவள் உணர்ந்தாள். அவனுக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் இதனால் தன் உள்ளுணர்ச்சி துலங்கிவிடப்படாதே என்று அவள் அஞ்சி அஞ்சி நடுங்கினாள்.
உயர்குடியினர் விருந்துக் கூடங்களில் பேச்சுக்களில் பெரும் பகுதி காதல் பற்றியதா யிருப்பது இயல்பு. இதுவும் லாரைனுக்கு இப்போது தலையிடியாயிருந்தது. அவள் உள்ளம் அதில் ஈடுபடாமலிருக்க முடியவில்லை - அவள் காதலின் மறைப்பும் புதுமையும் இம்முறை தாக்குதலுக்குத் தப்ப முடியவில்லை.
அவள் கணவரின் நண்பருள் ஒருவரும் அவளால் உயர்வாக மதிக்கப்பட்டவரும் ஆன கோமான் தேசேகரே இத்தடவை அப்பேச்செடுக்கக் காரணமாயிருந்தார். அவர் வந்ததும் அவளுக்கு வழக்கமான முறையில் முன்பே கூறாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார். மற்ற நண்பர்களிடம் கூட அவர் நேராகப் பேசவில்லை. லாரைன் சென்று அவரிடம் “உடம்புக் கென்ன? ஏன் பேசாதிருக்கிறீர்கள்?” என்றாள்.
அவர் அவள் முகத்துக்கெதிரே ஒருதாள் நறுக்கை எறிந்து, "இதோ பாருங்கள், நீங்கள் உங்கள் புதிய கவிதை நண்பர் மூரட்டுடன் சேர்ந்து கொண்டு எனக்குத் தந்துள்ள கூட்டுப் பரிசை!" என்றார்.
லாரைன், அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். ஆம். மூரட்டின் கவிதைக் குறும்பில் அவளும் ஈடுபட்டு, தேசேகருக்கு மிகப் பொருத்தமான ஓர் இலத்தீன் கவிதையை அவள் தன் இனிய