உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

அப்பாத்துரையம் - 30

ஃபிரஞ்சு நடையில் மொழிபெயர்த்திருந்தாள். மூரட் அதில் தான் ஓர் அடியைச் சேர்த்து, தன் பெயரையும் லாரைன் பெயரையும் அவ்வடியிற் பொறித்துத் திருவிளையாடல் நிகழ்த்தியிருந்தான். தேசேகர் இதனால் அடைந்த மனத் தாங்கலை மாற்ற அவள் அரும்பாடு படவேண்டியதாயிற்று. இறுதியில் ஒருவாறு அமைந்த பின் தான் இவ்வளவு எளிதாக அதில் மனத்தாங்கல் அடைபவரல்லரென்றும், இது தவிர வேறு சில நிகழ்ச்சிகளும் தம் மனத்திற்குத் தொல்லை தந்திருந்தன வென்றும் கூறினார். எல்லாரும் அந்நிகழ்ச்சிகள் யாவை என்றனர். அவர் மற்றொரு அனுபத்தை விவரித்துரைத்தார்.

தேசேகர் படைத்துறையில் அலுவல் பார்த்தவர். அவர் மேலாளாக சாட்டர்ன் பணியாற்றினார். தேசேகரின்கீழ் பணியாற்றிய ஒருவன் அடிக்கடி பணியிலிருந்து ஓய்வு கோரி வந்தான். அவர் ஒரு தடவை விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அவன் நேரடியாக சாட்டர்னுக்கே மனுவிட்டு ஓய்வு கோரத் துணிந்தான். அவனுக்கு ஓய்வும் கிடைத்துவிட்டது. தேசேகர் தன்கீழ்ப் பணியாற்றிய ஒருவனுக்குத் தன்னைப் பொருட் படுத்தாமல் ஓய்வு கொடுத்ததுபற்றி சாட்டர்னிடம் குறை பட்டார். சாட்டர்ன் சிரித்துக்கொண்டே அவரிடம் விளக்கம் கூறினார். “நான் உங்களை அவமதிப்பதற்காக அப்படிச் செய்ய வில்லை. அவன் எதற்காகக் கேட்டான் என்ற மறை செய்தியை நான் அறிவேன். இத்தகைய மனிதக் குறைபாடுகளை நீங்கள் அறிவதுமில்லை, மதிப்பதுமில்லை. அத்துடன் இந்நிகழ்ச்சியில் தனிப்பட்ட சுவை வேறு உண்டு. அவன் எனக்குக் கடிதம் எழுதி ஓய்வு பெற்றது தன் காதற்கிழத்தியைச் சென்று காண்பதற்காகவே. எனக்குக் கடிதம் எழுதிய அதே நாளில் அவளுக்கும் கடிதம் எழுதியிருந்தான். ஆனால், மறதியாக அவன் இரண்டு கடிதங் களையும் தலைமாறி உறைகளில் போட்டு அனுப்பி விட்டான். என் கடிதம் காதலிக்குச் சென்றிருக்க வேண்டும். காதலிக்கு எழுதிய கடிதமே எனக்கு வந்தது. அதைப் பார்த்ததும் மறு பேச்சின்றி ஓய்வு கொடுத்துவிட்டேன். நீங்களும் அதை வாசித்துப் பார்க்கலாம் - மனிதர் குறைபாடுகளை அறிந்து, அதனால் நீங்கள் கோபங்கொள்ளாமல் மட்டும் இருக்க வேண்டும் என்று கோருகிறேன். ஏனென்றால், அதில் உம்மைப் பற்றிய அவன்