உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ||

அப்பாத்துரையம் - 30

மூரட்டுடன் நன்கு பழகியிருந்த ஒருவனே அவளிடம் வண்டியோட்டியா யமர்ந்திருந்தான். அவன் இத்தறுவாயில் அவளிடம் எதுவும் கேட்காமலே குறிப்பறிந்து எல்லா ஏற்பாடுகளும் செய்து வந்தான். அவளுக்கு வேண்டிய ஆடை யணிமணி வகைகளைப் பற்றிக்கூட அவன் அவளிடம் கேட்கவில்லை. தானாக எடுத்து வைத்து அவள் முன் இருந்து கட்டினான். குழந்தைகளுக்கான துணிமணி, விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள் முதலிய யாவும் ஒழுங்குபடச் சேகரமாயின். லாரைன் தூய வெள்ளாடையே அணிந்து புறப்பட்டாள். உலாவியிருக்கும்போது படிக்க அவள் ரூசோவின் ஹிலாயிஸ் ஏட்டையும் எடுத்து வைத்திருந்தாள். சிறுமி அடிலிக்கு இப்போது ஆறு வயது. அவள் நாய்க்கு மூரட் 'பாள் ஆளி' என்று பெயர் வைத்திருந்தான். அடிலி அந்நாயை அங்குமிங்கும் பின் தொடர்ந்து துரத்தி விளையாடியவாறே சென்றாள். வண்டியோட்டி மூட்டைகளை எடுத்துக்கொள்ள, மற்றொரு பணியாள் மூன்று வயதுடைய அகஸ்டியைத் தூக்கிக்

று

காண்டான்.

அன்று அவர்கள் ஓர் ஏரியில் படகிற் சென்று அதன் நடுவிலுள்ள தீவில் உலாச் சோறு உண்ண எண்ணியிருந்தனர். வண்டியோட்டியே படகுக்கும் ஏற்பாடு செய்து படகோட்டவும் முன் வந்தான்.

கு கரையிலிருந்து உதைக்கப்பட்டது. துடுப்புகள் தெளிந்த பளிங்குபோன்ற நீரை இருபுறமும் துளைந்து படகை முன் செலுத்தின. துடுப்புகளிலிருந்து கண்ணாடிப் பாளங்கள் போல வெளியோடும் நீர்க் குமிழிகளைப் பார்த்தும், நீர்ப் பூச்சிகளைத் தின்னப் பறந்து வரும் விட்டில்களை வேட்டை யாடியும் அடிலி சுற்றித்திரிந்தாள். சிறுவன் அகஸ்டியோ தாயை அகலாது படகின் இப்புறமும் அப்புறமும் சுற்றித் திரிந்தான்.

அவள் மனம் அமைதியுடனிருந்தது. நீர்க் காற்று பகலின் வெப்பிடையே நல்லின்பம் தந்தது. அக்காட்சிகளிடையே ரூசோவின் ஹிலாய்ஸைத் திறந்து அவள் அதில் ஈடுபடலானாள். ஆனால், இவ்வாசிப்புக்கு இது சமயமல்ல என்பதை அவள் விரைவில் உணரவேண்டிய தாயிற்று. ஏனெனில், விட்டி லொன்றை வேட்டையாடும் போது படகின் விளிம்பு கடந்து