உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

153

சென்று அடிலி நீரில் விழுந்து விட்டாள். லாரைன் கூறுமுன் படகோட்டிபடகை நிறுத்திக் குதித்துஅவனைப் படகேற்றினாள். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு லாரைன் அவளைத் தேற்ற வேண்டிய தாயிற்று. மூரட் இருந்தாலன்றி, குழந்தைகள் பற்றிய கவலை யில்லாமல் வாசிப்பது என்பது முடியாது என்ற எண்ணம் அவள் மனத்திரையில் வந்து தலை நீட்டிற்று. ஆனால், அவள் அவ்வெண்ணத்தை துரத்தியோட்டினாள். ஒரு பிள்ளைகளிடத்திலும். ஒரு கண் புத்தகத்திலுமாக வைத்துக் கொண்டு படிப்பதாகப் பாசாங்கு செய்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தாள். ஆனால், கண்தான் இந்த ஏமாற்றில் ஈடுபட்டதே தவிர, மனம் நெடுநேரம் வேறு எதிலுமே தங்காமல், அவளையும் மீறி ஆக்டேவ் மூரட்டைச் சுற்றிவட்டமிட்டது.

கண்

ஏரியின் நீர்ப்பரப்பு பச்சை வண்ணத் தகடுபோல் பளபளப்பாக மின்னிற்று. அதனிடையே உள்ளூரப் பரப்படியிலிருந்து சிறிது சிறிதாக மேலெழுந்து கரையருகே வெண்ணுரையுடன் சென்று கலகலத்துக் கை கொட்டியார்க்கும் சிற்றலைகள் வெண்கோலமிட்டு அழித்த வண்ணமிருந்தன. கரையருகில் வளர்ந்து நீர்த்திரைகளை நுகரத் தலைகளை வளைத்து நிற்கும் மரங்களும் கரையருகில் சதுப்பு நீரில் படர்ந்த அல்லிக் கொடிகளும் கண்ணுக்கு நாற்புறமும் விருந்தளித்தன. தொலைவில் காணப்பட்ட அவ்வல்லி மலரின் வனப்புடன் போட்டியிட்டு அகஸ்டியின் குருதிச் சிவப்பங்கியும் அடிலியின் வெள்ளிய அங்கியும் காண்பவர் உள்ளங்களைக் களிப்பித்தன. பாரிஸின் செயற்கையழகியல் ஈடுபட்டு மகிழ்ந்த கண்கள் இவ்வியற்கை யழகில் தம்மை முற்றிலும் பறிகொடுத்தன. ஆனால் இவ்வழகுகளுக்கு அழகு தரக்கூடும் ஏதோ ஒன்று குறைபட்டதாக அவள் உள்ளம் உணர்ந்தது.

அவள் சிந்தனைகளிடையே முத்துப்போன்ற ஒரு கனத்த மழைத்துளி அவள் மூக்கு நுனியில் பட்டுத் தெறித்தது. அவள் சிறிது அதிர்ச்சியுற்றுச் சுற்றுமுற்றும் நோக்கினாள். கதிரவன் மேல்பால் விழும் நேரமாகவில்லை யாயினும், கதிரொளி மறைந்து மங்கிவிட்டது.வெண்முகிற் குலங்கள் படிப்படியாக நிறுங்கறுத்துப் புகைப்படலங்களாகி வந்தன. முதல் துளியை அடுத்து விரைவில் துளிகள் விழலாயின. திடுமென்று படபடவென்ற இரைச்சலுடன்