154
II-
அப்பாத்துரையம் - 30
பெருமழையே கொட்டத் தொடங்கிற்று. இவ்வளவு மாறுதலும் சில நொடிகளுக்குள் விரைந்து நடைபெற்றதனால் அவளால் இன்னது செய்வதென எண்ணக்கூடவில்லை. இருப்பது கரையிலிருந்து தொலைவில் தன் கண்ணின் கருமணிகள் வேறு தன்னுடனிருந்து இப்புயலில் சிக்கிக் கொண்டன. கையில் குடையுமில்லை - ஒதுங்கி நிற்க வகையுமில்லை. முன் கருதலின்றி இப்படிவந்துவிட்டோமே என்று அவள் தன்னைத்தானே கடிந்து
கொண்டாள்.
அகஸ்டியும் அப்போது வாத்துகள் மீது கவனம் செலுத்தியிருந்தான். அவை யாவும் கரையை நோக்கி அம்புகள் போல் பாய்ந்துகொண்டிருந்தன. "அம்மா,அதோ வாத்துகள் விரைந்தோடுகின்றன. மழை வலுக்கும் என்பதற்கு இது அடையாளம் என்று மூரட் மாமா கூறுவாரல்லவா? நாம் இப்போது தம்பியை வைத்துக்கொண்டு என்ன செய்வோம்?' என்றாள் அடிலி.
அவள் கேள்வி தன்னை இடித்துக் காட்டுவது போலிருந்தது லாரைனுக்கு. அவள் திகைத்தாள். தன் இருகுழந்தைகளையும் இரு விலாப்புறத்திலும் இழுத்தமைத்துத் தன் அங்கியால் அவர்களைப் பொதிந்து கலையைக் கவலையுடன் நோக்கிய வண்ணம் படகு செலுத்துபவனை விரைந்து செலுத்தும்படி ஊக்கினாள்.
இச்சமயம் ஒரு புதரடர்நத தீவருகிலிருந்து ஒரு படகு அவர்களை நோக்கி விரைந்து வந்தது. அதில் யாரோ குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வந்தது தெரிந்தது. ஆளணுகியதும் குடையினடியிலிருந்து மூரட்டின் சிறு முகம் அவளை நோக்கிக் குறுநகை நகைத்தது. காலமறிந்து உதவ முன் வந்த இவ்வரவு அவள் முகத்திலும் கவலைக்குறியகற்றி நன்றியின் புன்னகை வருவித்தது. அடங்கிய அச்சமுழுதும் ஆர்வ வரவேற்பாக மாறிற்று. குழந்தைகளோ தாயைக்கூட மறந்து அவனை நோக்கித் தாவின. அவர்களின் ஆரவாரம் புயலை மறக்கடித்தது.
மூரட் குடையாதரவு மட்டும் கொண்டுவரவில்லை.அடிலி, அகஸ்டி ஆகியவர்களுக்கான தின்பண்டங்கள், உணவுப் பொருள்கள், குழந்தைகளுக்கும் லாரைனுக்கும் வேண்டிய