உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

155

புயலங்கிகள், சேற்றில் நடக்க உதவும் புறக் காற் புதையல்கள் ஆகிய யாவும் அவன் படகிலே கொண்டுவரப்பட்டிருந்தன. ஆகவே, அவர்கள் புயலைச் சட்டைபண்ணாமல் அவரவர் சட்டையணிந்து குடையின் பாதுகாப்பில் வீட்டில் அமர்வது போல் அமர்ந்து புயலை ஒரு கண்காட்சியாகக் காண முடிந்தது. படகோட்டிக்கு வேண்டிய முரட்டுப் பையும் அவன்முன் கருதலுடன் எடுத்து வந்திருந்ததால், படகு புயலிலும் இன்ப உலாப்போல உலா வர முடிந்தது.

லாரைன் உள்ளத்தின் சீற்றம் அகன்றதுடன், தன் புறத்தோடகற்றி இயற்கைக் கனிவுடன் அகமகிழ்வுற்றது. அதனறிகுறியாக அவள் தானே வலிந்து முன்னைய இயற்கை மரபுநின்று மூரட்டுடன் பேசத் தொடங்கினாள்."இப்போது நம் படகு ஒரு பறவைக் கூண்டாய் விட்டது. நாம் எல்லாரும் அதில் உள்ள பறவைகளாய் விட்டோம்” என்றாள்.

"இதோ நம் பறவைக் குஞ்சுகள்” என்று மூரட் அடிலியையும் அகஸ்டியையும் எடுத்து மடியில் வைத்தணைத்துக் கொண்டான்.

தன் பிள்ளைகள் கூடத் தன்னை விட்டு விட்டு அவனிடம் சென்றிருந்து அகமகிழ்வு காட்டியது லாரைனுக்குச் சிறிது பொறாமையை உண்டுபண்ணிற்று. அவள் சிறிது நேரம் பேசாமலிருந்தாள்.

குடையின் விளிம்பிலிருந்து நீர் தாரை தாரையாய் ஒழுகிற்று. பிள்ளைகள் அதில் கையிட்டு நீரை ஏந்தின. மூரட்டும் கூட நீரை ஏந்திக்கொண்டு “மழை நீர் புயல் நீராயில்லை. அது நல்ல வெதுவெதுப்பாகவே இருக்கிறது?” என்றான்.

“உங்களுக்கு எல்லாம் வெதுவெதுப்பாகவே வந்தமைந்து விடுகின்றன” என்று தன் உள்ளார்ந்த புழுக்கம் தோன்ற நறுக் கொன்று கூறினாள் லாரைன்.

அவன் நகைத்தான். “இதுவா தங்கள் நன்றி. தாங்கள் கூறுவதைப் பார்க்க, இந்தப் புயலுக்குக்கூட இயற்கை காரணமல்ல, நான்தான் காரணம் என்று நினைக்கிறீர்கள் போலத் தோற்றுகிறதே" என்றான்.