156
அப்பாத்துரையம் - 30
லாரைன் மனம் மீண்டும் மாறிற்று. “நான் அப்படி எண்ண வில்லை; ஆனால், அதனை நீங்கள் எதிர்நோக்கியிருக்க வேண்டும்."
மூரட்: ஆம்.
லாரைன்: எப்படி உங்களுக்கு மட்டும் அது முன்கூட்டித் தொரிந்தது?
மூரட்: காற்று வடக்கிருந்து அடித்ததைக் கவனித்தேன். வடக்குக் கறுத்து வந்தது. தங்கள் பயணம் பற்றிக் கவலைப்பட்டு நான் பாரிஸ் செல்வதை நிறுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு தீவில் வந்து காத்திருந்தேன்.
தன்னைப்பற்றிய அவன் உள்ளார்ந்த கவலை அவள் உள்ளத்தை உருக்கிற்று. தன் குழந்தைகளிடம் தன் உயிரையே வைத்திருந்ததாக அவள் நினைத்திருந்தாள். ஆனால், குழந்தை களை இத்தகைய முன் எச்சரிக்கை யில்லாமல் அவள் கூட்டி வந்திருந்தாள்.
மூரட் காதலை ஒரு விளையாட்டாகக் கருதியிருந்தது உண்மையாயிருக்கலாம். இன்று அது அவனுக்கு விளையாட்டாக இருக்க முடியாது என்பதை அவள் கண்டாள். ஆனால், இன்னும் அவள் தன் உள்ளார்ந்த மாறுதலை அவனிடம் காட்டத் துணியவில்லை. நேர்மாறாக அவள் மீண்டும் தன் கையிலுள்ள ரூசோவின் புனைகதையிடையே கவனம் செலுத்தத் தொடங்கினாள்.
இப்போது பொறாமையின் ஒரு புயல் வீச்சு அவனுடைய உள்ளத்தையும் தைத்தது.
66
‘அது என்ன புத்தகம்?" என்று கேட்டுக் கொண்டே அவன் அதை வாங்கினான். வாங்கி அதை வெடுக்கென்று ஏரியில் எறிந்தாள்.
அவன் சீற்றம், உணர்ச்சி கண்டு அவள் திகைத்தாள். ஆனால், அவ்வுணர்ச்சியை எதிர்ப்பது உணர்ச்சிப் போராட்டத்தை வளர்ப்பதாகும் என்றெண்ணிப் பல்லைக் கடித்துக் கொண்டு வாளா இருந்தாள்.