உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ||

அப்பாத்துரையம் - 30

இருவர் உள்ளங்களும் கூத்தாடின. ஒருவர் நாடித் துடிப்பு அதனை மற்றவர்க்கு அறிவித்து வந்தது.

அடிலியை அவன் மடிமீது எடுத்து வைத்துக் கொண்டான். அவள் மடிமீது எடுத்து வைத்துக்

அகஸ்டியை

கொண்டாள்.

அடிலியை அணைத்த அவன் கைகள் அவள் தோள்களில் வந்து தழுவின.

அகஸ்டியின் கன்னங்களைக் கிள்ளிய அவள் விரல்கள் அவன் கன்னங்களை மறைத்துப் படிந்த மயிர்களை நீவி அவற்றைத் தடவின.

அவர்கள் உள்ளங்கள், இடையே கரையில் வந்து மோதும் இரண்டு இன்பக் கடல்களாயின.