உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ||

அப்பாத்துரையம் - 30

ஃபிரஞ்சு அரசியல் இப்போது திட்டமிட்டிருந்தது. அதற்காக விரிவான முறையில் ஆளெடுக்கப்பட்டனர். லாரைனை மணந்துகொள்ள வேண்டுமானால், நற்பணியும் வருவாயும் வேண்டுமென்ற எண்ணங்கொண்ட ஆக்டேவ் மூரட் தன் நண்பர்கள்,அரசியல் தோழர்கள் யாவரிடமும் தனக்கு நல்ல பணி ஒன்று பார்த்துத் தரும்படி கூறியும் எழுதியும் வந்திருந்தான். அவன் பாடல்களில் கருத்துப் போக்கு அரசியல் துறைகளில் அவனுக்குப் பெருத்த எதிர்ப்பை உண்டுபண்ணி யிருந்ததனால், எங்கும் பணியுதவி கிட்டவில்லை. போர்த் துறையில் மட்டுமே இடம் கிடைத்தது. இங்கிலாந்துப் படையெடுப்பு அணியில் அவன் ஓர் உயர்தர பதவியிலமர்த்தப் பட்டான்.

இங்கிலாந்துப் படையெடுப்பு உண்மையில் நடைபெறவே யில்லை.ஃபிரஞ்சுப் புரட்சி அவ்வெண்ணம் மீண்டும் பல ஆண்டு எழாமல் தடுத்துவிட்டது. நெடுநாட் சென்று நெப்போலியன் மீண்டும் அதே முயற்சியில் ஈடுபட்டான். ஆனால், அவனாலும் அது நிறைவேறவில்லை. ஆகவே, மூரட்டின் தொண்டும் படைத்தளங்களில் சில ஆண்டுக் காலம் மாறிமாறிச் சென்றிருந்ததுடன் நின்றது. இவ்வாண்டுகளில்போர் இல்லை - போர்ப் பேச்சே இருந்தது. மூரட்டுக்கு மனநிலையை உயர்த்துவதற்குக் கூடப் பயன் படவில்லை. ஏனென்றால் அவன் கனிந்த உள்ளமும் பெரும் போக்குகளும் அவன் வருவாயை இங்கும் கரைத்தன.

படைவீட்டு வாழ்வு அவன் வாழ்வின் பல நெருப்புத் தேர்வுகளிடையே ஒரு நீண்ட நெருப்புத் தேர்வாக மட்டும் உதவிற்று. அந் நெருப்புத் தேர்தல்களிடையே லாரைனின் கடிதங்களும் அவள் நினைவுகளும் மட்டுமே அவனுக்கு உயிர்ப்பூட்டும் தென்றல் காற்றுக்களாயுதவின. அவன் முதற் கடிதம் அவன் காதலின் தன்மையையும் உள்ளத்தின் பிரிவுத் துன்பத்தையும் நன்கு எடுத்துக் காட்டிற்று. அவர்களிடையே உள்ள மரபுப் படி 'காதல், காதலி' என்ற சொற்களை அவன் வழங்கவில்லை. நட்பு, உடன்புறப்பு என்ற சொற்களே அவற்றில் இடம்கொண்டன. ஆனால், ஆர்வமும் துடிப்பும் நட்பு, உடன் பிறப்பு ஆகியவற்றின் உணர்ச்சியிலிருந்து அவன் உணர்ச்சியையே வேறு பிரித்துக் காட்டின.