உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(164

||-

அப்பாத்துரையம் - 30

அவளும் உண்மையில் அவனில்லாதபோது தன் வாழ்வின் வெறுமையை உணர்ந்தாள். அவன் வீட்டாட்சித்திறமை அவள் திறமையின்மையை மூடி வைத்திருந்தது.பணியாட்களை அவன் திறத்துடனும் அதே சமயம் அன்புக் கனிவுடனும் ஆட்சி செய்திருந்தான். ஆட்சிப் பொறுப்பு அற்ற செல்வ இளவர ளவரசியாக அவள் நாட்கழித்திருந்தாள். இப்போது அவளே நேரில் ஒவ்வொரு சிறு காரியத்தையும் கவனிக்க வேண்டிவந்தது கவனித்தும் முன்போல் எல்லாம் சரிவர நடைபெறவில்லை. பல பணியாட்கள் அவளை ஏமாற்றினர். பலர் அவளிடம் கடுஞ்சொல் கூறினர்.

பலர் அவள் சீற்றத்துக்காளானார்கள். அவன் வருமுன் அவள் எல்லாரையும் தன் மனம்போல் விட்டிருந்தபடிகூட இப்போது அவளால் முடியவில்லை. உள்ளத்தில் எழுந்து அவளை உள்ளூர ஆட்கொண்டு வதைத்து வந்த உணர்ச்சிகளைத் தனக்கும் தெரியாமல் அடக்க அவள் செய்த முயற்சி அவள் உள அமைதியையும் இன்ப அமைதியையும் குலைத்து, கடுஞ்சொல், கடுகடுப்பு ஊட்டியிருந்தன. அவள் உடல் நிலையையும் அவள் சூழ்நிலையையும் இது கெடுத்து அவள் வாழ்வில் கசப்பூட்டியது.

லாரைன் கத்தோலிக்க சமயத்தில் பற்றுடையவளாகவே முழுதும் கழித்தவள். அவள் உள்ளார்ந்த கலை வாழ்வு அவள் புறவாழ்வைச் சிறிதும் மாற்றி விடவில்லை. ஞாயிறு தோறும் அவள் கோயிலுக்குப்போக முடிவதில்லையாயினும் கூடுமான மட்டும் போவாள். அவன் உடனிருந்தபோது காதல் வாழ்வு கோயிலைப் பெரிதும் மறக்கடிக்கவைத்திருந்தது.பிரிவும் தன் காதல் உணர்ச்சியை அடக்கும் எண்ணமும் இப்போது சமய உணர்ச்சிக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டின.

அவள் இப்போது வழக்கமாகக் கோயில் செல்லத் தொடங்கி யிருந்தாள். அத்துடன் அவள் தன் இரண்டக வாழ்வைத் தானே கண்டிக்கத் தொடங்கினாள். இக்கசப்பினால் அவள் பழைய நெஞ்சு நோய் மீண்டும் தலைகாட்டிற்று. கசப்பு நோயூட்டினதுடன், நோய் கசப்பைப் பெருக்கிற்று.தன் இரண்டக வாழ்வுதான் கடவுள் சீற்றத்துக்கு வழிவகுத்து நோய் வருவித்ததென்று அப்பேதைப் பெண் எண்ணினாள். ஆகவே அவள் வழக்கமாகக் கத்தோலிக்கர் மதகுருவிடம் பாவ