உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(166

அப்பாத்துரையம் - 30

அவ்வப்போது அவள் தன் உள்ளத்தில் படிந்த சூழ்நிலைச் சாயலை அகற்ற எண்ணி பாரிஸ் செல்வாள். சில சமயம் அரண்மனை சென்று அரசியின் அவையில் தன் பழைய நண்பர்களுடன் கூடி ஊடாடுவாள். இங்கே எப்போதும் போல் எல்லாரும் அவளை வரவேற்று அவள் கூட்டுறவில் மகிழ்வார்கள். அவள் உரையாடல் திறமும் எப்போதையும் விடச் சிரிப்பதாகவும் உயர்வுடையதாகவுமே இருந்தது.

ஆனால், ஏதோ ஒரு பளு -ஒரு நிழல் அவள் வாழ்வின் மீது படிந்திருந்தது என்பதை எவரும் கவனியாதிருக்க முடியவில்லை. அவள் எப்போதுமே இன்ப வாழ்வி ன்ப வாழ்விடையிலும் தன் மதிப்பும் பெருமித நடையும் உரையவளாயிருந்ததனால், யாரும் அது பற்றி அவளிடம் உரையாடத் துணியவில்லை. அண்டிக்கேட்பவருக்கோ அவள் 'தனி வாழ்வை' யோ, தன் குழந்தைகளின் உடல் நிலையையோ சுட்டிக்காட்டுவாள். பாரிஸ் அவ்விளக்கம் கேட்டு உள்நடுக்கமுற்றது.அரண்மனை இன்பவாழ்வில் இடம் பெற்ற ஒரு நங்கை கணவன் இறப்புப்பற்றி இழவு மரபுப்படி பேசலாம் - சில நாளைக்கு! குழந்தை நோய் பற்றிக் கவலைப்படுவ தாகக் கூறலாம் - பிற நிகழ்ச்சி ஈடுபாடுகளுக்கிடையில்! கணவனுக்காகப் பல ஆண்டு கடுந்தவம் - குழந்தைகள் நோய்க்காகக் குறைபட்டழியும் உள்ளம்! அவள் உயர் பண்பு கண்டு இன்ப வேட்டைக்காடாகிய பாரிஸ் நடுங்கியதில் வியப்பில்லை. இவள் உண்மை மனநிலையும் மனப் பண்பும் அறிந்தால் அவர்கள் திகில் இன்னும் மிகுதியாகும் என்பது உறுதி.

ஆனால், அவள் நிலைமையை முற்றிலும் உணர்ந்து கொள்ள முடியாத மூரட் அவள் பாரிஸ் வாழ்வு. அரண்மனை நடமாட்டம் பற்றிப் பொறாமையும் கவலையும் கொண்டான். எத்தனை உயரிய இன்ப ஆடல் பாடல்கள்! எத்தனை வகை வகை நண்பர்! அவற்றிடையே போலந்து நாடோடியை அவள் மறந்துவிடக் கூடும் என்று அவன் அஞ்சினான்.

என்

"நான் மீண்டும் பாரிஸ் பெருமன்றம், பாரிஸ் என்ற சொல்லைக் கேட்கவே வெறுக்கிறேன். என்னை லாரைனிடமிருந்து அனுப்பியது பாரிஸே! அங்கே உன் உள்ளங் கொள்ளை கொள்ள எத்தனை பொருள்கள், நிகழ்ச்சிகள், ஆட்கள்! அவற்றின் நினைவுகள் மேன்மேல் வந்து படிந்து என்