168 ||
அப்பாத்துரையம் - 30
“கற்பனையில் நான் தங்களுக்கு முத்தங்கள் பொழி கின்றேன். கற்பனை முத்தங்கள் ஏமாற்றந் தரலாம். ஆனால், உண்மை முத்தமில்லாத விடத்தில் பல ஏமாற்றங்கள் ஓர் உண்மை நுகர்வாகாதா? தவிர உண்மை முத்தங்கள் கூட எனக்கு அருமைதானே!”
"என் கடிதங்கள் காதற் கடிதங்கள் போன்றிருக்கின்றன. ஆம், என் காதலை நான் தங்கள் உள்ளத்தினிடமிருந்து மறைக்க வேண்டியதில்லை. செவிகேட்கச் சொல்லக் கூடாதென்பது தங்கள் ஆணை. கடிதத்தில் கூட எழுதப்படாதுதான். ஆனால், கட்டனையிட்டதாங்கள் சீறாதிருக்கும்போது, கட்டளையின் பிடி தளருமல்லவா? மேலும் நான் எத்தகைய காதலன்? இது வரை எனக்காக நீங்கள் செலவு செய்திருக்கும் பணத்தை நான் கணக்குப் பார்த்தேன். (நட்பில் கணக்குப் பார்ப்பதை மன்னிக்க வேண்டும். கணக்குத் தானே அதை நட்பெல்லை கடவாமல் தடுக்கிறது!) எனக்கான செலவில் நூறில் ஒரு பங்கில் காதலர் எத்தனை பேர் அகப்படமாட்டார்கள் காதலரும் அகப்படுவார்கள் கலைப்பண்பமைந்த” நல்ல குதிரைகளும் அகப்படும். ஆகவே, நான் உடன்பிறப்பாளனாய் இருந்து குளிர்காய வேண்டியதுதான்.
-
அவள் உள்ளத்துயரை அவன் அறியவில்லை. அவன் துயரை அவளும் எண்ணிப் பார்க்கவில்லை. அவன் தன் துயரில் வர வர அவர்கள் கட்டுப்பாட்டை மீறித் துணிந்து காதற் கடிதங்களும் கண்டனக் கடிதங்களும் எழுதலானான். அவற்றில் பல அவள் உள்ளார்ந்த காதல் தீயைக் கிளறின. பல அவளை உயிருடன் வாட்டி வதைத்தன. அவள் வதைப்படும் ஊமை உயிரினம்போலத் துடியாய்த் துடித்தாள். ஆனாலும் அவள் வாய்விட்டுக் கடிதத்தில் ஒரு வரியும் இதுபற்றி எழுதத் துணிவில்லை. காதலிக்கிறேன் என்றால், எங்கே காதலுரிமையில் மணஞ்செய்து கொள்ள வற்புறுத்துவானோ என்று அவள் அஞ்சினாள். நாடோடிக் காதலனை மணக்கும் துணிவு இன்னும் அவளுக்கு வரவில்லை.
இங்ஙனம் மற்றும் ஓர் ஆண்டு கழிந்தது. போர் முயற்சி இப்போது கைவிடப்பட்டது.மூரட்டுக்குப் பணியிடம் இப்போது அகன்றுவிட்டது. மூன்று ஆண்டு அவன் தன் உயிர் நிலையான லாரைனை விட்டுப் பிரிந்திருந்தும். அதனால் அடைந்த பயன்