வாடா மல்லி
169
பிரிவுத் துன்பமன்றி வேறு எதுவுமில்லை. அவன் வருவாயில் மிகுதியாக எதுவும் மிஞ்சவில்லை. அவன் முன்னினும் வறுமைப்பட்டவனாகவே இருந்தான்.
விடுதலை கிடைத்ததும் அவன் பாரிஸுக்கு மீண்டு வந்தான். அவள் பாரிஸில் இருப்பதாகவே அவன் கேள்விப் பட்டிருந்தான். ஆனால், அவனுக்கு எதுவும் எழுதாமல், அவள் பாரிஸ் விட்டு நாட்டுப்புறத்துக்குச் சென்றிருந்தாள். அவன் தன்னைக் கண்டதும் தன் உள்ள நிலைமையை முழுதும் உணர்ந்து கொள்வான் என்று அவள் அஞ்சினாள். அவன் கடைசிக் கடிதம் இதனை அவளுக்கு நன்கு விளக்கிற்று. “உன் நோய், உன் மனவேதனைகள், மத குருவிடம் தெரிவித்த உன் உள்ளத்தின் உள் மறைவுகள் எல்லாவற்றையும் நீ வெளியிட்டுக் கூறவேண்டியது என்னிடமே - வேறு எங்கே? உனக்கு ஆறுதல் தரவேண்டியவன் நான் - வேறு யார்?”
ஆனால், நேர்மை வழியையும் அறிவு வழியையும் பின்பற்ற நீங்கள் தயங்கினால், நான் அவ்வழியை உங்களுக்குத் திறந்துவிட முடியும் - என் வாழ்வில் அவை பயன்பட்டிராவிட்டாலும் உங்கள் வாழ்விற்குப் பயன்படலாம். நான் உண்மையில் பூனையினும் வலி குறைந்தவன்.ஆனால், உங்களைக் காக்க வேண்டி வந்தால், உங்கள் உள்ள மறைவை நான் உணரக் கூடுமானால், நான் ஒரு புலியின் வலிமை உடையவனாவேன். அதே சமயம் தங்கள் உள்ளங் கனிவிக்க ஒரு மென்மை வேண்டுமானால், மற்ற எவ்வகையில் நான் புலி போன்றவானாலும், உங்கள் வகையில் நான் உங்கள் மென்கரங்களுக்கியைந்த பூனையாவேன். என்னை நம்பும்படி கோருகிறேன். தங்கள் நண்பர்கள், உறவினர்கள், தங்கள் சிறு குழந்தைகளை விட நான் தங்களை நேசிக்கிறேன்” என்று அவன் கடைசி கடிதத்தில் குறித்திருந்தான்.
மேலும் அதே கடிதத்தில் மற்றொரு தேதியிட்டு அவன் இன்னும் தெளிவாகத் தன் உள்ளக் கருத்தை வெளியிட்டிருந் தான். “இங்கே ஒரு நண்பர்மூலம் உங்கள் அவசர முடிவு பற்றியும் பாரிஸிலிருந்து என் வரவு கேட்ட பின் விரைந்து சென்றது பற்றியும் கேள்விப்பட்டேன். உங்கள் புரியாப் புதிர்ச் செயல்களுக்கு - உங்கள் உள்ளத்தின் கடுந் துயர்களுக்கு - நோய்களுக்குத்தான் காரணம் என்ன? மூன்றாண்டு பிரிவின் பின் அவாவுடன்