உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

175

ஆம். வந்துவிட்டது சந்திப்பு நேரம் தூக்கு மேடையில் கண்ணியவிழ்த்து விடும்போது அதைக் காணப் பொறாமல் கண் மூடிக் கொண்டு அக்காட்சியை அகக் கண்ணால் பார்க்கும் குற்றவாளிபோல, அவள் கண்ணை மூடிக் கொண்டிருந்தாள். ஆனால், தூக்குக் கண்ணி விழுந்ததாகத் தெரியவில்லை - அவன் பேசவே காணோம். என்ன செய்தி என்று கண்ணைச் சற்றே திருந்து பார்த்தாள். அவன் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறான். அவன் தோற்றம் அவன் விம்மி விம்மிக் கரைவதை எடுத்துக் காட்டிற்று.

“ஸ்தானீ!”

அவன் உடல் நடுங்கிற்று. கை அசையவில்லை.

“என் கண்ணே! என் அருகில் வா.

""

அவள் அவன் அருகில் வந்து மண்டியிட்டாள். முகத்தைப் புதைத்த கைகள் விலகின. ஆனால், முகம் மீண்டும் அவள் மடியில் புதையுண்டது.“என் லாரைன். நானே உன் வேலையை எளிதாக்கி விடுகிறேன். நீ எதுவும் விடை கூற வேண்டியதில்லை. நானே உன் உள்ளத்தில் உள்ளதை எல்லாவற்றையும் கூறி விடுகிறேன். என்னிடம் எப்படி வாய் திறப்பதென்று, எப்படி முகம் கொடுத்துப் பேசுவதென்று மலைக்க வேண்டாம். நான் கேட்ட கேள்விகளுக்கு விடை எனக்கே தெரியும். உன் வாயால் வேறு எதுவும் கேட்கவேண்டியதில்லை. ஒரே ஒரு சொல் தெரிந்தால் போதும். நீ என்னைக் காதலிக்கிறாயல்லவா?”

அவள் முழுமனத்துடன் அமைதியாக 'ஆம்' என்றாள்.

"ஆம்! அது போதும், மீந்த எல்லாம் நான் அறிவேன். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். உலகில் எந்தஆடவன் எந்தப்பெண்ணையும் காதலிப்பதைவிடநான் உன்னை மிகுதியாகக் காதலிக்கிறேன். எந்தப் பெண்ணும் எந்த ஆடவனைக் காதலிப்பதைவிட நீயும் என்னைக் காதலிக்கிறாய் என்று நான் இப்போது தெள்ளத் தெளியக் காண்கிறேன்.”

66

'ஆம்.அவ்வண்ணமே நான் என்றும் காதலிப்பேன். “நானும் அப்படியே."