(176
அப்பாத்துரையம் - 30
இரண்டு உள்ளங்களும் இவ்வாறு ஒன்றுபட்டு ஒழுகின. லாரைன் தன் காதலனைத் துணிவுடன் ஏறிட்டுப் பார்க்க முயன்றாள். அதற்குள் மூரட்,
66
கண்ணே லாரைன், என்னை இன்னும் சற்று நேரம் பார்க்க வேண்டாம். என் துயரக் கண்ணீர் ஓய்ந்துவிட்டது. ஆனால், இன்னும் இன்பக் கண்ணீர்த் துளிகள் விழக்கூடும். இந்த மழை நேரத்தில் அது உன் ஆடைகளை ஈரமாக்கி விடும்.”
அவள் வெட்டெனச் சிரித்தாள்.
சிரிப்பில் அவர்கள் முதற்காட்சியின் துயரச் சூழல் அகன்றது. “ஆ! நீ சிரித்து விட்டாய். இனி நாம் அச்சமின்றி ஒருவரை ஒருவர் பார்க்கலாம், பேசலாம். துயரத்தின் பெருமித உருவில் நான் உன்னை அணுக முடியாது. சிரிப்பு வாயில் திறந்துவிட்டது இதோ!" -
அவன் எழுந்து அவளை வாரியெடுத்து ஆரத் தழுவினான். அவள் அவன் தோள் மீது துவண்டாள். அவன் முத்தங்கள் தெம்பற்ற அவள் உடலில் பொழிந்தது தெம்பூட்டின. அவள் அவன் திரண்ட தோள்களைக் கிள்ளி “உங்களுக்கு இப்போது எத்தனை துணிச்சல்!" என்றாள்.
பாற்குடமும் தேன் குடமும் மோதி உடைந்தன. பாலும் தேனும் கலந்து பாய்ந்தன.
ரண்டு உள்ளங்களில் தனித் தனியே சிறைபட்டுக் கிடந்த நேர் மின்சாரமும் நிரை மின்சாரமும் இடைமறிப்புத் தகர்த்து ஒன்றுடனொன்று கலந்து பாய்ந்து ஒன்றுபட்டன.