182
II-
அப்பாத்துரையம் - 30
விரும்பத்தக்க நிலை என்று நான் கருதவில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் நமக்கு வேறு வழியில்லை. இது என் விருப்பமன்று. இயற்கையின் விருப்பம்."
அவள் வாதிட்டு வழிகாண முடியவில்லை. வாதிட்டு வழிகாணும் திறமும் அவளிடம் இல்லை. அவள் உடலின் உயிர்
அவன் உடலில் புகுந்துகொண்டதாகவே அவளுக்குத் தோற்றிற்று. அவன் நல்லவனா கெட்டவனா; அவன் கூறுவது சரியா, தப்பா என்று ஆராயும் ஆற்றலைக்கூட அவள் அறிவு இழந்தது. அவன் தோள்கள், அவன் நிமிர்ந்த நோக்கு ஆகிய இவையே அவள் உடலையும் உயிரையும் ஈர்த்தன. அவள் அவன் கழுத்தைக் கைகளால் பிணைத்துக் கொண்டு அழுதாள்.
அவன் அவள் வெதும்பிய மேனி துடைத்து நீவி மயிர் கோதினான். அவள் முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்தி 'நானிருக்க உனக்கு ஏன் உனக்கு ஏன் கவலை? கவலை? என்னிடம் உன்னை ஒப்படைத்துவிடு. உன் துன்பம் எனக்கு. என் இன்பம் உனக்கு' என்றான்.
அவன் அணைப்பு அவளை இறுக்கிற்று.
அவள் உயிர்ப்பு அவனை இனிய நறுமணமுள்ள நெய்யி லிட்டு வாட்டிப் பொரிப்பது போலிருந்தது.
அவன் முத்தங்கள் அவள் உயிரை வாங்கின.
அவள் இன்பத்தில் துன்பமும், துன்பத்தில் இன்பமும் பெற்றாள்.
நன்மை தீமை, உயர்வு தாழ்வு, தக்கது தகாதது ஆகிய பேதாபேதங்கள் யாவும் அவளை விட்டகன்றன. அவள் இரண்டற்ற காதலுணர்ச்சி அலைகளில் மோதி அலைக் கழிக்கப்பட்டு உலகை உலகை ஒரு கனவென மறந்து வாழலானாள்.
அக் கனவிடையே - நீண்ட ஆழ்ந்த கனவிடையே அவள் குழந்தைகளின் விளையாட்டாரவாரமொன்றே முன்னைய வாழ்வை ஓரளவு நினைவூட்டுவதாயிருந்தது.
அவள் காதற் கடலில் மூழ்கி அதன் அடித்தலத்தில்
சோர்ந்து கிடந்தாள்.