உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. பிரிவுக்கு முன்

லாரைனும் மூரட்டும் பகல்முழுதும் அடிலி, அகஸ்டி ஆகியவர்களை உடன்கொண்டு அவர்களுடன் விளையாடியும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தும், அவர்கள் மூலமே ஒருவர் உள்ளத்தை மற்றவருடன் பரிமாறிக் கொள்வர். இரவில் அவர்கள் பேச்சிடையே குழந்தைகள் உறங்கும். பேச்சிடையே தான் விழிக்கும். ஆனால், இவ்விரண்டு எல்லைகளுக்கிடையில் பிள்ளைகள் தாம் நேரம் செல்வதறியாது ஒருகணம் கழிந்ததென உறங்கி எழுந்தனர். காதலின் முதிர் பறவைகளோ அதற்குள் தம் உலகைப் பல தடவை வட்டமிட்டுலாவிப் பல சிற்றூழிகள் கழித்துவிடும்.

கணப்படுப்பருகில் எதிரெதிர் இருந்து, ஒருவர் கால்கள் மற்றவர் கால்களுடன் ஊடாட அவர்கள் பேசியிருப்பர். ஒருவரிடுப்பில் ஒருவர் கை கோத்து இரவின் நிலாக் காட்சியில் வெளியே தோட்டத்தில் உலவித் திளைப்பர். பலகணியருகே இருவரும் நின்று காதற் கூண்டிலுள்ள இரு பறவைகள் உலகை எட்டிப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு வாயாடாமலே உளமூடாடுவர். இங்ஙனமாகச் சில நாட்கள் கழிந்தன.

எதிரெதிர் மின்னாற்றலால் இயக்கப்பட்ட இரு இரும்புத் துண்டங்கள் போல அவர்கள் ஒன்றுபட்டு உறவாடினர். ஆனால், அவர்கள் உள்ளங்கள் அடிக்கடி பூசலிட்டன. ஞாயிற்றின் சுழல் விசையினால் எறியப் பட்டும் அப்பால் செல்ல முடியாமல், அதன் ஈர்ப்பாற்றலில் சிக்கி அஞ்ஞாயிற்றையே சுற்றிச் சுற்றியோடும் கோளினங்கள் போல, அவர்கள் உள்ளங்கள் தத்தம் தன் முனைப்பு முற்றும் அழியாத நிலையில் விலக முயன்றும் விலக முடியாமல் ஒன்றை ஒன்று பின்னி வட்டமிட்டுச் சுழன்றன. அச்சுழற்சியில் மூரட் ஞாயிறாயிருந்தான், லாரைனோ கோளினங்களாயிருந்தாள். அவள் தன் முனைப்பும் பெண்மையும்