உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

185

பெரிதும் வலுவிழந்தாலும் தாய்மை உணர்ச்சி இடையிடையே வந்து தூண்டச் சிறிது சிறிது வலுப்பெற்று எதிர்த்து நின்று தயக்கமுற்றது.

தன் உள்ளத்தின் இப்போராட்டக் காலத்தின் ஒவ்வொரு வினாடியும் லாரைன் நினைவில் சுட்ட தழும்பு போல் பதிந்திருந்தன. தன்முனைப் பழிவுபற்றிப் பின்னாளில் அவள் என்றுமே கழிவிரக்கம் கொண்டதில்லை. அது முற்றிலும் அழியாமல் தலைதூக்கி நின்றதற்காகவே அவள் நெடுநாள் தன்னைப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அத்தறுவாய்களிலும் மூரட்டின் ஆண்மை மிக்க உருவம், அவளை எண்ணி எண்ணியே வட்டமிட்ட அவன் உரையாடல் வெள்ளம், அவள் மனத்தை மாற்ற அவன் வாதிட்ட வாதங்கள், முறையிட்ட காதல் முறையீடுகள், அவன் உள்ளத்தில் ஈர்க்கிடையின்றி நிறைந்து நிலவிப் பொங்கி வழிந்த அவன் காதல் கனிவு ஆகியவை அவளுக்குப் பேராதரவும் பேரின்பமும் அளித்தன.

ஆனால், பெண்மை தளர்ந்தும் முறியவில்லை. கொடி கொழு கொம்பையே தழுவியாடியும் அதனைப் பற்றிச் சுருள மறுத்தது. அவள் தன் கோடு மீறத் துணிந்தாள். ஆனால், கோட்டினை அழிக்க ஒருப்படவில்லை. மூரட்டின் ஆழந்தேரும் ஆழ்கயக் கரண்டி அவள் காதலுள்ளத்தின், ஆழங்கடந்து எங்கும் அடித்தடம் காண முடியவில்லை. ஆனால், இவ்வோரிடத்தில் அது பாறைமீது மெல்லனக் கண் கண் என்று மோதிற்று.

அவள் உடலை அவனிடம் ஒப்படைத்தாள். உள்ளத்தை ஒப்படைத்தாள். தன் மானத்தை ஒப்படைத்தாள். தாய்மையைக் கூட ஒதுக்கிவைக்க ஒருப்பட்டாள். ஆனால், தாய்மையை ஒப்படைக்கத் தயங்கினாள். தயக்கம் நீடித்தது. அவள் எதிர்த்தே நின்றாள்.

அவள் திட்டம் மாற்றினாள். ஆண்மை பணிய மறுத்தது. சற்றுத் தன்னை உரப்படுத்திக்கொண்டு அவன் ஒரு நாள் மாலை கூறினான்: "இன்னும் ஒரு முறை நான் பழைய வெள்ளத்தில் குதித்துப் பார்த்து விடுகிறேன். ஏதாவது உயர் பணியை எப்படியாவது பெற்றுவரப் போகிறேன். என்றும் அது வராமற் போகாது. நம் இடக்கு நிலை நீங்க அது ஒன்றுதான் தற்போதைய