27. பிரிவு
ன்
ஆண்டுகள் இரண்டு சென்றன. அதன் ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஓராண்டாகக் கழிந்தது. அவளுக்கோ ஒவ்வொரு நாளும் இரண்டு ஆண்டுகளாகக் கழிந்தன. இவளை நேரிடையாக வந்தடைய உதவத்தக்க, தன் மதிப்புரிமையுடன் அவளை உரிமை மனைவியாக்கிக் கொள்ள உதவத்தக்க ஒரு பணிபெறும் முயற்சியவாவில் அவன் உள்ளம் ஈடுபட்டு நாட் கழித்தது. அத்தகைய குறி எதுவுமின்றி, தன் வசத்திலில்லாத, தன் விருப்பத்துக்குக்கட்டுப்படாத ஒரு எதிர்கால நற்பேற்றை எண்ணி, காதலுள்ளத்தின் நம்பிக்கையன்றி வேறு நம்பிக்கையின்றி, அவள் உள்ளம் ஏங்கிக் கிடந்தது. அவள் உயிர் அவள் உடலில் இல்லை என்பதை அம்மாளிகையிலுள்ள பணியாட்களும் உணராதிருக்க முடியவில்லை குழந்தைகள் கூட அவள் மாறுதல் கண்டு ஒன்றும் புரியாமல் மறுகின. பாரிஸ் உயர்குடி மக்களோ, அவள் ஒழுக்க உயர்வினால்கூட அவள் கூட்டுற வின்பத்தை வெறுக்க முடியாதிருந்தவர்களாதலால் திடுமென அவள் வரவு நின்றதுகண்டு மலைவுற்றனர். பலர் வந்து வந்து அவளை அழைத்தனர் மன்றாடினர். அவள் உள்ளம் தனக்குள் எதையோ சுற்றிச் சுற்றி வந்ததேயன்றிப் புறத்தே எதையும் நாடவில்லை. அவள் சொற்களும் வளைய வளைய ஏதோ கூறினதன்றி எதற்கும் சரியான விடை பகரவில்லை. அவள் மாளிகை அவளுக்கு ஒரு துறவுக் கூடமாயிற்று. பாரிஸ் அவளைப் படிப்படியாக மறந்தது.
பிரிவிடையேயும் அவர்கள் சிறு பிணக்குகள் நின்று விட வில்லை. அவர்கள் கடிதங்கள் பலவற்றை இப்பிணக்குகள் நிறைத்தன.
“நீ நான் என்று உன்னை அழைக்காமல் நான் வேறு எப்படி அழைக்க முடியும்? நேரிடையே கூடப் பிறர் இருக்கும் போது நான்