உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

191

நீங்கள், நாங்கள் என்று சுட்ட முடிகிறதேயன்றி, தனியே இருக்கும் போது அவ்வாறு பேசமுடிவதில்லையே. கடிதங்களில் எத்தனையோ செய்திகள் எழுதுகிறோம். எதுவும் பிறர் பார்க்கத் தக்கதல்லவே. அப்படியிருக்கப் பலர் காண எழுதுவதுபோல் எப்படி எழுதமுடியும்? அதனால் நான்தான் என்ன ஆறுதல் பெறமுடியும்? நீதான் என்ன ஆறுதல் பெற முடியும்? என் கையை, என் முகத்தை, என் உள்ளத்தை நான் ‘நீங்கள், நாங்கள்' என்று பேசமுடியுமா? நீ அவற்றினும் எனக்கு நெருங்கிய உரிமையுடைய வளாயிற்றே! நீ என்ன கூறினாலும் நான் நீ, என் கண்மயி போன்ற காதலுரிமையை இழக்க முடியாது. இங்கே எனக்கிருக்கும் ஒரே ஆறுதல் அதுதான் என் ஓயாத அவை சொற்கள் அல்ல சிந்தனைகளின் பிழிவுகள். கடிதத்தில் மற்றச் சொற்களை யெல்லாம் விட்டுவிட முடியும். கடிதம் முழுவதுமே நீ, நீ, கண்மணி, கண்மணி என்று எழுதினால் கூட எனக்குப் போதும். அச்சொற்களிலேயே என் உயிர் அடங்கியிருக்கிறது. அவற்றைப் பற்றி எழுதுவதைவிட என்னால் எழுதாமலிருந்து விடக் கூட முடியும்!”

-

அது அவன் கடிதங்களில் ஒன்று.

-

அவள் மறுத்துரைத்தாள். வாதாடினாள். ஆனால், அவளுக்கு அவள் உள்ளத்தின் அவாவைத் தெரிவித்தது அவள் கடிதங்களல்ல, அவன் கடிதங்களே. யார் கையோ தன் கையைப் பிடித்து எழுதுவதாகவும், யார் உள்ளமோ தன் உள்ளத்தினருகி லிருந்து எழுதச் சொல்வதாகவும், அதற்கு மறுமொழி அவனிடம் சென்று தங்கிய தன் உள்ளத்திலிருந்து, அவன் கையை இயக்கிய தன் அரை ஆர்வத்தினாலேயே எழுதப்பெற்று வருவதாகவும் அவளுக்குத் தோன்றிற்று. பெண்களுக்குக் காதற் போராட்டம் ஒரு போராட்டம் அன்று, ஒரு நாடகம் மட்டுமே என்பதை அவள் உணர்ந்தாள்.

அவள் திட்டுதல், அவள் கண்டனம், அவன் வெறுப்பு ஆகியவை தாம் அவன் உள்ளத்துக்குத் தெவிட்டாத அமுதமா யிருந்தன. அவன் தனிமை. அவன் மறைபட்ட வாழ்வு, அவன் துயர் ஆகியற்றைத் தாங்க அவனுக்கு வலிவு தந்தவை அவைகளே.

அவள் கடிதங்களை அவன் தவிர வேறு யாரும் பார்ப்ப தில்லை என்பதை அவன் எழுதியபின்தான் அவள் உணர