192 ||
அப்பாத்துரையம் - 30
முடிந்தது. தன் உள்ளத்தையே அவள் மற்றொருவர் உள்ளமாகக் கருதி அதனிடமிருந்தே தன் காதலை மறைக்க எண்ணியிருந்திருக்க வேண்டும். தங்கள் மறை காதல் நடிப்பை விட்டுப் படிப்படியாக அவன் கடிதங்களில் தன் உள்ளம் திறந்து காதலிக்கத் தொடங்கினான் என்று அவள் சினங்கொண்டு ஒருநாள் இரவு உட்கார்ந்து "இனி இப்படி வெளிப்படையாகக் கண்ணே, நீ, நான் என்று எழுதக்கூடாது. நம் உள்ளத் திரை மறைவிலுள்ள காதல் திரை மறைவாகவே இருக்கட்டும். கடிதத்தில் நட்புரிமை தோன்ற நீங்கள், நாங்கள் என்றே எழுதுங்கள்” என்று அவள் எழுதியிருந்தாள். அவன் அப்படியே எழுதியிருந்தால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அவள் அறியவில்லை! இரண் டாண்டுகளிலும் மூரட் எதிர்பார்த்ததுபோல, அவனுக்குப் பணி உயர்வு எதுவும் கிட்டவில்லை. அவன் பாடல்கள், அவன் வணங்காமுடி மரபு,அவன் கொடு நாக்கு அவனை என்றும் சிறு படைத்துறைவனாகவே வைத்திருந்தன. அவன் கனிந்த உள்ளத்தைக் காதல் கூடத் தடுத்தாள் முடியவில்லை. ஏழைச் சிறுவர், சிறுமியர், வறுமைக்குழியில் உழலும் எத்தனையோ கன்னியர் அவன் சிறு வருவாயில் பொத்தல்கள் செய்தனர். அவன் இடதுகை கொடுத்துக் கொண்டேயிருந்தது. வலது கை கடன் வாங்கிக் கொண்டே யிருந்தது. அம்பலத்தில் சென்றாடியும் அரங்கன் அரங்கனாகவே அவன் மீள வேண்டிய நிலையிலிருந்தான்.
இரண்டாண்டு வாழ்வில் அவனுக்குக் கிடைத்த செல்வ மெல்லாம் இரண்டு நாள் ஓய்வில் ஊர் சென்று மீளும் உரிமைதான்!