உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

II-

அப்பாத்துரையம் - 30

தேவையில்லாதிருந்தது. புறத்தடைகளை இங்ஙனம் நீக்கிய பின் இருவரும் தமக்கு தமக்கு முன்னிரவுக்குப் போதிய பொருள்களுடன் புறப்பட்டனர்.

தலைமகனார்

மாளிகையுடன்

உணவுப்

சுற்றுப்புறங்களும்

மறைவதற்குள் அவர்கள் அவற்றை முற்றும் மறந்து விட்டனர். ஊர்ப்புறவெளி கடந்து மரங்கள் கடந்து வந்தபின் அவர்களைச் சுற்றிலும் புதர்க் காடுகளே காணப்பட்டன. கடல் போலப் பரந்து கிடந்த அவற்றின் கிளைகளும் தழைகளும் அசைவது அலைகள் எழுந்தெழுந்தடங்குவது போல் இருந்தது. அவ்வலைகளின் பரப்பில் வெண் மலர்களும் பொன் மலர்களும் அணியணியாக நின்று மூழ்கி எழுந்தன. ஆங்காங்கு உற்ற புதர்களுக்கிடையில் உயர மிக்கதாகத் தோன்றிய சிறு காமரங்கள் தனித்தும் இணை இணையாகவும் சில சமயம் குடும்பம் குடும்பமாகவும் நின்றன.

தென்றல் தழைகள் மீது உராசி மலர்களைக் கொய்து குறும்பு நகை நகைத்துச் சென்றது. இளமுகில்கள் மலைமுகடுகள் மீது தவழ்ந்து விளையாடின. நீரோடைகள் மறைந்து ஓடிச் சலசலத்து இறைந்தன. வானவெளியில் ஓடிச் செல்லும் செக்கர்வானின் பின்தானையை இழுத்துப் பிடித்தணைக்க விரைவதுபோல் இருளின் முரட்டுக்கரங்கள் தாவின.இளவேனில் பருவத்தின் தொடக்கமாதலால், குளிர்முற்றிலும் விலகவில்லை. ஆதலால், இளவெயில் மறைந்ததுமே உடல் சற்றே பனிக்கத் தொடங்கிற்று. லாரைன் நடை சிறிது தளர்ந்தது.அவள் மூரட்டின் கையை இறுகப் பற்றி அவன் தோள்கள் மீது சார்ந்து அவன் தாவுநடையுடன் ஒத்து நடந்தாள்.

அவள் அன்று உலகை மறந்தாள். தன் செல்வக் குழந்தை களைக்கூட மறந்தாள்; தன்னையே அவள் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவள் உள்ளத்தில் மூரட்டின் வடிவமொன்றே இடம் பெற்றது. தென்றல் அவன் அங்கியை அவள்மீது கொண்டு வந்து போர்த்திற்று. அதன் குளிர் கலந்த வெதுவெதுப்பு அவள் மேல் ஆடைகளைத் துளைத்து உடலை வாட்டிற்று. அதன் வாட்டத்திலிருந்து தப்ப அவள் அதன் விலாவைச் சுற்றித் தன் தளிர்க்கைகளை வளைத்தணைத்துக் கொண்டாள். அவனும் அவள் தோள்கள்மீது தன் கைகளைச் சேர்த்து அவளைப் பற்றி இழுத்துச் சென்றான்.

ஆை