உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

ஆ‘நீயா' என்றான்.

அவள் சிரித்தாள்.

நாம் இருப்பது “தலைமகனார் மாளிகை!” என்றாள்.

197

அந்த ஒரு வாசகம் அவர்கள் தற்போதைய நிலையையும் அவள் புதுத்தொடர்பையும் அவனுக்கு ஒருங்கே நினைவூட்டின. ஆழ்ந்த சிந்தனை அவன் முகத்தில் நிழலாடிற்று. ஆனால், அவள் முகத்தின் அமைதியும் அதில் நடனமிட்ட களிப்பும் அவனை மீண்டும் ஊக்கிற்று.

லாரைன் தன் நாட்குறிப்பில் இந்நாள் தனிப்படக் குறிக்கப்பட்டது. அவன் நாட்குறிப்பிலும் அப்படியே அது அவர்கள் காதல் மணநாள். அவர் வாழ்நாளில் ஆண்டுதோறும் இந்நாளை இருவரும் கூடியிருந்த போது அடிக்கடி அவர்கள் அவ்விடத்தைக் காண விழைவதுண்டு. காண முடியா விட்டாலும் அதனையும் அதனிடமாகத் தாம் நுகர்ந்த இன்ப நினைவு களையும் அவர்கள் ஒருவர்க்கொருவர் கூறி மகிழ்வர். இருவரும் வேறு வேறிடத்தில் அந்நாளில் இருக்க நேர்ந்தால், இருவர் கடிதமும் அந்நாளில் மற்றவர் கையில் இருக்கும். அந்நாளைய ஒருவர் நினைவு மற்றவர் முன் வந்து உலவும்.

காதலன் பல ஆண்டு காத்து, காதற் பலவாண்டு காத்து, காதலின் மறுக்கவொண்ணாக் கவர்ச்சியிலீடுபட்டு இருவரும் காதல் மணங் கண்டனர். ஆனால், அவர்கள் புறவாழ்வு இன்னும் முன் போலவே நிகழ்ந்தது. முன்போல அயலாரிடையே காதலியையும் அவள் செல்வரையும் கண்டு பசப்புரை பேசி, பின் ஒருவரிடம் ஒருவர் விடைகொண்டு பிரியலாயினர்.