வாடா மல்லி
199
"உன்னை நினைக்கும் போது என் உள்ளத்தில் பல்வகை உணர்ச்சிகள் ஒரே காலத்தில் வந்து மோதுகின்றன. உனக்குரிய ஒரு உடன் பிறந்தான், ஒரு உடன் பிறந்தாள், ஒரு மகன், ஒரு நண்பன், ஒரு மனைவி இன்னும் நன்றாகச் சொன்னால் ஒரு காதற்கிழத்தி ஆகிய இத்தனை பேரின் கனவுகளும் என் உள்ளத்தில் எழுகின்றன.
>>
"நம் உயிர்கள் ஒன்றாய்விட்டன. நாம் இனி எப்படி தனித்தனி வாழ முடியும்..நான் உயிர்க்கும் மூச்சைவிட நீ எனக்கு இன்றியமையாதவளாய் விட்டாய்.?”
“என் நண்ப, உன்னிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.என் காதலி, உன்னிடம் இத்துடன் விடைபெற்றுக்கொள்கிறேன். நான் பதினைந்தாண்டு பருவமாயிருந்து, நம் காலம் பொன்னார்ந்த பழங் காலமாயிருந்தால் எப்படி இன்பக் காதல் உணர்ச்சியில் களிப்பேனோ, அப்படி உன் காதலில் களிக்கிறேன்.'
"ஒருவருக்கொருவர் முற்றிலும் உளம் பொருந்தி, ஒருவருக் கெனவே ஒருவர் படைக்கப்பட்டவராய், காதலென்னுங் கடுந்தீயில் தூய்மையுற்று ஒரே குளம்பில் உருகி ஒன்றுபட்ட இரு உயிர்களின் கூட்டுறவுக்கு முன் இந்த உலகத்தின் திரண்ட செல்வங்கள் கூட எம்மட்டு?"
"உயிர் என்றும் முதுமையடைவதில்லை. என் உயிரோ தன்னகத்துக் கால எல்லைவரை கூட அணைய முடியாத காதல் கொழுந் தீ சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.”
மூரட் உள்ளத்தைப் பீறிட்டு அவன் மைக்கோலின் வழி உருகியோடிய காதல் நெருப்புப் பிழம்புகள் இவை! அவை இன்ப நெருப்பாய் லாரைன் உள்ளத்தை வதக்கிப் பிழிந்தன. அவன் கடிதங்கள் அவளுக்கு அவன் காதல் வாய்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தின.
“நான் இத்துடன் விடை கொள்கிறேன், என் அருமை, என் அருமைத் துணைவரே! என் ஆழ்ந்த இடையறாக் காதலில் சலித்துவிடாதேயுங்கள். அது எவரும் அறிய முடியா அருமை யுடையது.அது எனக்கு இனிமையின் ஓயாத ஊற்று.என்கவலைகள் அனைத்தினிடையேயும், என் சுமைகளைத் தாங்க எனக்கு உதவும் ஓர் உறுதி வாய்ந்த நண்பனாய் அது இயங்குகிறது.”