உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 ||

அப்பாத்துரையம் - 30

'இத்துடன் முடிக்கிறேன். என் வாழ்வின் இன்பமே! துன்பமே! இன்பதுன்பமே!”

அவள் இதற்கு முன் எவரையும் காதலித்தேயறியாதவள். பருவத்தின் முதற்றொடக்க நிலை கடந்த இவ்வுணர்ச்சி அவளை இளந் தளிர்போல் அதிரவைத்தது ஆனால், அதே சமயம் அது அவள் குருதிகளினூடே மின்னாற்றல்போல் விருவிருப்பூட்டி அவளுக்கும் புத்திளமை தந்தன. மறுபுறம் அவனோ என்றும் இது போல் காதலித்ததில்லை. பருவங் கடந்த அவன் காதல் அவன் ஆண்மையைத் தளர்த்தவில்லை - ஆனால் பெண்மையைப் பற்றி ஏளனமாகக் கருதி அதே சமயம் அவர்களைத் தன் காதல் ளையாட்டால் அடிமைப்படுத்திய அவன் உள்ளம் இன்று ஒரு பெண்ணின் காதலுக்குத் துடிதுடித்து நின்றது.

உள்ளங்கள் இணைந்த பின்னும் அவன் ஆணவம், அடக்குமுறை, கோபதாபங்கள் அகலவில்லை. அவன் அவளுடன் அடிக்கடி ஆரவாரம் செய்து பூசலிட்டான். அவளும் அடிக்கடி பிடிவாதமுள்ளவளாகவே இருந்ததனால் பூசல் சில சமயம் புயலாக எழும். அவர்கள் மறைகாதலின் மறைப்புக்குக்கூட சில சமயம் இப்பூசல்கள் பங்கமாய்விடுமோ என்ற நிலை அடைவதுண்டு. ஆனால், உள்ளத்தின் வேறுபாட்டை நீக்கும் இணைக்கும் அவர்கள் உடல் இணைப்பு அமைந்தது. கோபத்திடையே வேட்கை மிகுந்தது. அணைப்பிடையே வெறுப்பு மறைந்தது.

அவள் குற்றங்கள் அவனுக்குத் தெரியாமலில்லை. அவன் பெண்ணுக்கு அடிமையல்ல. அவள் காதலின் வலிமைதான் அவனை ஓரளவு தன்னுடன் பிணித்து வைத்தது என்று அவள் அறிந்தாள். உலகெலாம் சுற்றிய மரபில் வந்தவன் அவன். பெண்டிர் வேட்டையாடியவன். அவன் பழக்கவழக்கங்களை அவள் காதல்கூட மாற்ற முடியவில்லை. காதலுக்குக் கூட அவன் அடங்கி நடக்கவில்லை. அடிக்கடி ஆடு மாடுகளை நடத்தும் கோனான் குரலும் நடையும் அவன் காதலில் இருந்தன. ஆனால் காதலில் அவள் பட்டபாடு! அவளுக்காக அவன் துடித்த துடிப்பு! காதல் ஆர்வம்! இவை அவன் உள்ளத்தைத் தன் வேகத்தில் அடித்துக்கொண்டு சென்றன. அவள் குழந்தை போன்ற பண்பு, ஒருமை நினைவுகள் அவனைக் கவர்ந்தன.