206
அப்பாத்துரையம் - 30
எப்போதும் திரும்பி வா. என் கை இரையுடன் எப்போதும் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.
"உன் காதலைப்பற்றிக்கூட இனிநான் கவலைப்படமாட்டேன். என் காதலைப்பற்றிய கவலையே எனக்குப் பெரிதாகிவிட்டது.நீ யாரைக் காதலிக்கிறாய் என்பது பற்றிக் கூட எனக்குக் கவலை யில்லை. உலகில் எவரையும்விட நான் உன்னைக் காதலிக்கிறேன். என்பதை மட்டும் நீ மறக்காதிருந்தால் போதும். உன்னுடன் வாழக் கிடைப்பதுவரை, அல்லது அந்நம்பிக்கை உள்ளவரை என் வாழ்வு எனது.
இனிக் கசக்கி எறியாத கை.
அவள் தன்னையும் கடந்து விட்டாள். தன் காதலையும் கடந்து விட்டாள் என்பதை அவன் கண்டான். ஆனால், அவள் கடிதம் இப்போதும் குறையே கண்டது. “குறைகள்யாவும் உன்னுடையனவே. ஆனால், தண்டனை யடைந்தவன் நான்” என்று பல்லவியுடன் தொடங்கி “சென்ற காலப் பிழைகள், இப்போதைய பிழைகள், வருங்காலப் பிழைகள் யாவும் நான் மறக்கிறேன் ஆனால், ஒரு குறை இன்னும் உறுத்துகிறது. சினமாறிய கடிதத்தில்கூட உன் அன்பு முத்தம் அனுப்பவில்லை!” என்று எழுதியிருந்தான்.
உ
அவன் சிறுபிள்ளைத்தனமான ஆர்வம் அவள் பெண்மை யைக் கலகலக்க வைத்தது.
அவன் கண் பார்வை மங்கத் தொடங்கியுள்ளதென அவள் கடித மூலம் கேட்டு அவள் அவனுக்கு எழுதிய கடிதம் இது.
"உங்கள் நிலை கேட்டுக் கலங்குகிறேன். ஆனால், அதனைச் சரிப்படுத்த வழியுண்டு. கண்ணுக்குக் கட்டுக் கட்டிவைத்துப் புகுங்கள். வெளியே பகலிலல்ல, வீட்டினுள் இருக்கும் போதும், இரவிலும், ஆம்! இருட்டில்கூட என் குறைகளைத் தங்கள் கண்கள் சிறிதுகாலம் துளைத்துப் பார்க்காமலிருக்கட்டும். என்னை அறிய உங்களுக்குக் கண்ணால் காணவும் காதால் கேட்கவும் கூட இனித் தேவைப்படாதென்று எண்ணுகிறேன். தங்கள் நெஞ்சு என் நெஞ்சையறியும், தங்கள் உடல் என் உடலை அறியும்!”
தங்கள் புற உயிர்