(216)
||--
அப்பாத்துரையம் - 30
வாழ்வில் ஒருபெரும் புயலை உண்டுபண்ணி அகன்றார். மூரட் போன்ற ஒரு தோழமையில்லாக் குறையை அது அவளுக்கு எடுத்துக்காட்டியது.
L
ஆசிரியர் பெர்னார்ட் வந்தது முதல் பிள்ளைகளை அவர் பெரும்பாலும் அவர் பொறுப்பிலும் பணிப்பெண் டார்னாட் பொறுப்பிலும் விட்டுவிட்டதால், அவர்களிடையே ஏற்பட்டு வரும் மாறுதலை அவள் கவனிக்க முடியவில்லை; அவளை உள்ளூர வாட்டிவந்த காதல் பிரிவுத் துன்பமும் இங்ஙனம் கவனிக்கும் சூழ்நிலையை உண்டுபண்ணவில்லை.பிள்ளைகளுக்கும் தனக்கும் இடையே சிறிது சிறிதாக ஒரு திரையிடப்பட்டு அவர்கள் பிரிக்கப் படுவதையும் அவள் காணவில்லை. எனினும் நாளடைவில் சில சிறு செய்திகள் அவள் உள்ள அமைதியைக் குலைக்கத் தொடங்கின.
ஒருநாள் லாரைன் தன் பெட்டி வண்டியில் ஏறி வெளியே போய்க் கொண்டிருந்தாள். வழியில் ஒரு தோட்டத்தினருகே ஒரு குத்துக்கல்மீது அகஸ்டி உட்கார்ந்து கொண்டிருப்பது கண்டு அவள் திடுக்கிட்டாள். அணுகிக் கேட்டபோது அவள் ஆசிரியர் தன்னை அங்கே இருக்கச் சொல்லிப் போயிருப்பதாகவும் விரைவில் வந்து விடுவார் என்றும் கூறினான். “அப்படியானால் நானும் அவர் வரும்வரை இருந்து போகிறேன்.” என்று தாய் கூறியதும் சிறுவன் அடைந்த கலவரத்தை அவள் கவனித்தாள். ஆசிரியர் வந்ததும் "இப்படிச் சிறு பிள்ளைகளைத் தனியே விட்டுப் போகும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அவர் முனகிக் கொண்டு “உடம்புக்கு நலமில்லை” என்பது போன்ற நொண்டிச் சாக்குகள் கூறினார்.
ஒருநாள் விடியற்காலையில் லாரைன் படுக்கையிலிருந்து எழாமல் விழித்துக் கொண்டே கிடந்தாள். பிள்ளைகள் இரண்டும் வந்து நின்றிருந்தன. அவர்களைக் கண்டதும் ஆவலுடன் கைகளை விரித்து அவள் அழைத்தாள். ஆனால், அவர்கள் வர அஞ்சியவர்கள் போல நின்றார்கள். 'ஏன் வராமலிருக்கிறீர்கள், அம்மாவிடம் வர என்ன அச்சம்?' என்று கேட்டபோது அவர்கள் அழுதனர்.
இயற்கைக்கு மாறான இந்நிகழ்ச்சி லாரைனின் தாயுள்ளத்தை உறுத்தியது. குழந்தைகளைத் தான் நெடுநாளாக