உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

217

நேரிடையாகக் கவனிப்பதில்லை என்பதும், மூரட்டைப் போலத் தன்னினும் இனிய ஒருவர் அவர்களுக்கு இல்லை என்பதும் அப்போதுதான் அவளுக்குப் பளிச்சென்று புலப்பட்டது. அவர்கள் உடல் பொதுவாக அழுக்கடைந்திருப்பதும். அவர்கள் உடைகள் பழையனவாய்க் கந்தலடைந்திருப்பதையும் கூட அவள் கண்கள் அப்போதுதான் கண்டன.

மணியை அடித்து

டார்னாடை

அவள் உடனே அழைத்தாள். பணியாட்களுக்கு ஆணைகளிட்டும் நெடு நாளாகியிருந்தது. இப் புதிய மரபை டார்னார்டு மதிக்கவோ விரும்பவோ இல்லை என்பதை அவள் வருவதில் காட்டிய தாமதமும் வரும்போது முணுமுணுத்ததும் எரிந்து விழுந்ததும் நன்கு காட்டின. அத்துடன் லாரைனின் முதல் கேள்வியே அவள் குடும்ப நிலையை முழுவதும் அம்பலப்படுத்தத் தக்க தாயிருந்தது. அன்று காலைதான் லாரைன் அடிலிக்காக ஒரு உடைதுன்னிக் கொடுத்திருந்தாள். அவன் பழைய உடையை மாற்றி அதைத் தானே உடுத்த எண்ணி அதைக் கொண்டு வரும்படி லாரைன் பணித்தாள். அது வண்ணானிடம் போயிருக்கிறது என்று கூறி டார்னார்டு தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டாள். ஆனால், உண்மையில் அந்த உடையையும், பிள்ளைகளுக்காக லாரைன் கொடுத்த உடைகள், உணவுகள், சிற்றுண்டிகள், பணம் யாவுமே டார்னார்டின் பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்கும் தான் பயன்பட்டன. பிள்ளைகளை இருவரும் அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தி வைத்து லாரைனின் குடும்பப் பணத்தைக் கூட்டாகக் கொள்ளையடித்து வந்தனர். “அம்மாவிடம் எந்தச் செய்தியைக் கூறினாலும் உதை" என்று இருவரும் பிள்ளைகளை உறுக்கி வைத்திருந்தனர். இந்த அட்டூழிய ஆட்சிக்கு எட்டு ஆண்டுகளாகப் பிள்ளைகள் வாய் திறவாமல் ஆட்பட்டிருந்தனர்.

அவள் மனத்தில் படிப்படியாகப் பல ஐயங்கள் ஏற்பட்டன. ஆனால், அவள் ஐயங்களை யெல்லாம் கூளிகுறளிகளாக்கும்படி உண்மை கோரமான பெரும்பேயுருவில் ஒரு நாள் வெளிப்பட்டது. அவள் எதிர்பாராது வீட்டுக்குத் திரும்பி வந்தபோதெல்லாம் ஆசிரியர் பிள்ளைகளின் பயிற்சியில் ஈடுபடாததைக் கண்டாள். டார்னார்டும் தன் கடமைகள் எதுவும் செய்யாது எங்கோ சுற்றுவதும் தெரிந்தது. ஒரு நாள் எதிர்பாராத