அப்பாத்துரையம் - 30
218) || விதமாக அகஸ்டி ஒரு கடிதத்தைக் கையில் கொண்டு செல்வதை அவள் கண்டு விட்டாள். அவளைக் கண்டதும் சிறுவன் கடிதத்தை ஒளித்து வைப்பது அவள் ஐயத்தை பெருக்கியது.
“கடிதம் யாருக்கு?” என்று கேட்டாள் அவள்.
உ
ன்னும்
சிறுவன் நடுங்கினான். ஒதுங்கி ஓடத் தலைப்பட்டான். நிலைமை பின்னும் பெருத்த கிலியூட்டிற்று. அவள் சிறுவனை எட்டிப் பிடித்துத் தன் அறைக்குள் கொண்டு சென்று அறைக் கதவை உள்ளிழுத்துப் பூட்டிவிட்டுக் “கடிதம் யார் கொடுத்தது?” என்று கேட்டாள். அவன் நடுங்கிக்கொண்டே ஆசிரியர் டார்னார்டுக்குக் கொடுக்கச் சொன்னதென்றும், அதை வேறு எவரிடமும் கொடுத்தால் தனக்குத் தண்டனை கிடைக்குமென்றும் கூறினான்.
66
கடிதம் துறவியாகிய ஆசிரியரால் தன் காதற் கிழத்தியாகிய டார்னார்டுக்கு எழுதப்பட்டிருந்தது. 'அகஸ்டியையும் டார்னார்டின் கணவனையும் நஞ்சிட்டு விரைவில் கொன்று விடும்படி கூறி அதற்கான திட்டத்தை ஆசிரியர் அதில் விரித்திருந்தார். அதை வாசித்ததும் லாரைன், இடியுண்டவள் போலத் திடுக்கிட்டாள். அவள் மூளை கனவேகமாகச் சுழன்றது. அகஸ்டியை ஏன் கொல்ல வேண்டும்? ஆம்; இப்போது அவளுக்கு விளங்கிற்று. அது அவள் மடத்தனத்தின் பயம்தான் அகஸ்டியின் கல்வியை விரைவில் முற்றுவிப்பதற்காக அவள் ஒரு பெருந்தொகையை அவன் கல்விக்கென்று எழுதி வைத்து, கல்விப் பயிற்சிக்காலம் முடிவுற்றதும் அதை ஆசிரியர் பெற்றுக் கொள்ளலாம் என்று வரைந்திருந்தாள். அகஸ்டி கல்விப் பயிற்சிக் காலம் அவன் சாவினால் எளிதில் முடிந்துவிடும் என்று துறவியின் பேய் உள்ளம் திட்ட மிட்டிருக்க வேண்டும். 'சட்டத்தின் பிடி எழுத்தின் வாசகத்தையே பற்றி நிற்கும்' என்ற கோர உண்மையை அவள் கண்டாள்.”
"
டார்னார்டின் கணவனைக் கொல்வதற்கான காரணத்தைத் தேடிப்பார்க்க வேண்டியதில்லை. கணவனைக் கொன்றாலே சட்டப்படி அவளை மணக்க முடியும். துறவி என்ற நிலையைப் பெயர் மாற்றத்தால் தகர்க்க திட்டமிட்டிருக்கலாம்.