உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

225

உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் வாட்டியது. இரவெல்லாம் அவளை நான் என் படுக்கையிலிட்டுப் போர்த்திக் குளிர் வராமல் பாதுகாத்தேன். அவளும் ஒரு சிறிதுகூடக் கண்ணயரவில்லை; நானும் அப்படியே. அவளுடைய புதிய மாறுதல் நிலைபற்றி நான் அவளுக்கு எதுவும் அறிவிக்காமலிருந்து விட்டேன். ஆயினும் அதனால் அதிர்ச்சி ஏற்படாத வகையில் எல்லாம் ஒழுங்கமைக்கவே எண்ணியிருந்தேன். ஆனால், தன்னையறியாமல் வரும் இப்புது நிலைப் பற்றி அவள் இது காரணமாகவே இரட்டிப்புத் திகில் கொள்ளும்படியாயிற்று. புதுவரவு நான் எதிர்பாரா வகையில் அவள் அமைதி முற்றிலும் குலைத்தது.

மூன்றுமணி நேரம் இருவரும் இந்நிலையில் படுக்கை யிலிருந்தோம். இருவரும் எழுந்திருக்க வேண்டும் என்ற சிந்தையே யில்லாமல்தான் இருந்தோம். ஆனால், இறுதியில் கடிகாரத்தின் பக்கம் என்கண் திரும்பிற்று. ஒரு மணிக்குத் திருமணம். இப்போது இதற்குள்ளாகவே மணி பதினொன்றாயிற்று. இரண்டு மணி நேரத்துக்குள் அவள் உடுத்தி அழகு ஒப்பனை செய்தாக வேண்டும்.அவள் வருங்காலக் கணவனின் முதல்நாள் காட்சியின் முழுப் பயனை அப்போதுதான் அவள் அடைய முடியும்.

ஒரு மணிக்கு எல்லாம் சட்டமாயிற்று. மிகுந்தபெருமிதத் துடனும் ஆழ்ந்த அமைதியுடனும் முறைப்படி மண உலாவுக்குப் புறப்பட்டோம். அடிலியை கைப்பிடித்து நான் முன்னும், மணமகனைக் கைப்பற்றிக் கொண்டு அவர் தந்தை பின்னும் சென்றோம். மணமேடையின் முன் என் மகளை விட்டுப் பின்னடைந்தபோது என் நெஞ்சு துடியாய் துடித்தது. 'ஆம்' என்ற அந்த நிறை முதன்மையுடைய சிறிய சொல்லை, ஒரு தடவை வாய்விட்டுரைத்த பின் மீட்கமுடியாத அப்பெருந்திறச் சொல்லை, எவ்வளவு கழிவிரக்கம் கொண்டாலும் பயன் ஏற்றுத்தீரவேண்டிய அவ்வலிவு சான்ற சொல்லை அவள் வாய் ஒலித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சியைவிட உண்மையில் நான் அதே சொல்லைச் சொல்லிய போதுள்ள உணர்ச்சி மிகமிகக் குறைவே. ஆயினும் என்னதினும் இச்சொல் இங்கு எவ்வளவு மேம்பட்டது!

நான் முதுமை வாய்ந்த, ஒரு நோய்ப்பட்ட மணமகனைக் கட்டிக் கொண்டு, அவருக்குப் பெரும்பாலும் மனைவியாயிருப் பதினும் நோய் மருத்துவர் ஆகவே இருந்து வந்தேன். அவளோ