உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

227

மணமக்களைப் பாராட்ட வந்தனர். ஆயர் ஆய்ச்சியராக நடித்த ஒவ்வொருவரும் ஒரு காதற் பாடலின் இரண்டிரண்ட ஒவ்வொருவராகப் பாடினர். பின் நாட்டுப்புற இசைக் கருவிகளுடன் களங்கமற்ற நாட்டு ஆடல்களில் நாங்கள் கலந்து கொண்டோம். ஆ. லில் டிகண்டினுடன் நான் ஆட்டத்தைத் தொடங்கி வைத்தேன். என் குழந்தைகளுடன் நான் அன்று ஆடிய ஆட்டத்தினும் மகிழ்ச்சியுடன் நான் என்றும் ஆடியதில்லை என்று உறுதியாகக் கூறலாம். ஆடல் பாடல்கள் நாள்முழுதும் நடைபெற்றன. நாங்கள் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாயிற்று. பாட்டுகள் நாட்டுப்புறக் கவிஞரால் கட்டப்பட்டவை. அவற்றுள் குறிப்பிடத் தகுந்த ஒன்று, தச்சனால் இயற்றப்பட்டிருந்தது. அத்தச்சன் ஆதாமின் நேர்மரபில் வந்தவன் என்று கூறத் தடையில்லை! பாட்டின் வகைக்கு அவன் ஏதோ ஒரு பெயர் குறித்திருந்தான். ஆனால், அவன் அதை எழுதிய தாள் இருபது புத்தகத்தாளை அடக்குவது. அதில் அவன் நாலு பக்கங்கள் தான் எழுதியிருந்தான்! அடேயப்பா! அந்தப் பாடலுக்கு முடிவு என்று ஒன்று இருக்குமா என்று நாங்கள் நீண்ட நேரம் ஐயுறவு கொண்டோம். இந்த நிலையில் நாங்கள் நன்கு கேட்கும்படி அவன் ஒரு நாற்காலியின் மேல் நின்று கொண்டு கால் புள்ளி முற்றுப்புள்ளி விடாமல் நிறுத்தி வாசித்தான்.

ஆடி ஓய்ந்த பின் சிறிது நாட்டுப்புற விளையாட்டு விளையாடினோம். அதன் பின் தலைமகனார் எட்டுமணிக்கு விருந்தளித்தார். தலைமகனார் விருந்து வழக்கம் போலவே முழு நிறைவுடையதாயிருந்தது. விருந்து நெடுநேரம் நடந்தது. அதன் பின்னும் விளையாட்டு அதன் பின் எங்கள் இரவு - மணமக்கள் புது விடியல் போது, மணமகளை மன்றற் படுக்கைக்கு அழைத்துச் செல்லும் போது மணமகளுக்கிருந்த நடுக்கமும் மலைப்பும் கிட்டத்தட்ட எனக்கும் இருந்தது. வயது மிகுதியாயினும் கூட இன்றைய நிகழ்ச்சிகள் இன்னும் மிகப்பல அவற்றைத் தெரிவிக்கும் இடம் இதுவன்று - என் மூரட்டுடன் தனி வண்டையிருந்து அவனைச் சிரிக்க வைத்து மணிக் கணக்கில் வருணிக்க வேண்டிய சிறுகாட்சிகள் உண்டு. ஆனால் அவற்றுள் ஒன்று மணமகளுக்கு ஒரு சிறு தூண்டுதல் செய்யும்படி மணமகன் தந்தையை நான் தூண்ட நேர்ந்தது. அச்சமயம் எனக்கிருந்த அறைப்பு - என் வாழ்நாளில் அது போல் என்றும் இருந்ததில்லை

-