உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 30

228 || அதனால் சிவப்பேறிய முகம் இன்னும் சிவப்பு மாறவில்லை, இந்நிலையை என் மூரட் காண வேண்டும்!

று

அடிலி திருமணத்துக்குப் பின்னும் இரண்டாண்டுகள் லாரைன் தன் வழக்கமான தனி வாழ்வு வாழ வேண்டியிருந்தது. அவளுக்கு இப்போதிருந்த ஒரே இன்பம் இளங் காதலருடனும் புதல்வனுடனும் விருந்து, உலா அயர்தம் மலை, ஆறு முதலிய இயற்கைக்காட்சிகளை அவர்களுடன் அனுபவிப்பது மேயாகும். அடிக்கடி அவள் நாட்டுப்புறக் குடும்பங்களைச் சென்று பார்வையிட்டு அவர்களுடன் தங்குவாள். நாட்டுப் புறக் குடும்பங்களின் அமைதி அவள் உள்ளத்துக்குத் தற்காலிகமாக வாவது முழு நிறைவளித்தது. இவற்றைப் பற்றி யெல்லாம் கடிதங்களிலும் நாட்குறிப்புகளிலும் எழுதும்போது, அவள் தன்னை இரு சொற்களால் குறிக்கத் தொடங்கினாள். இவற்றுள் ஒருசொல் சிறு வகைச்சொல் ஆயினும், கேலியுடனும் அகமகிழ்வுடனுமே எழுதப்பட்டது. இதுவே லாரைன் தன்னைக் குறிக்குமிடத்து ஆக்டேவ் மூரட்டின் காமக்கிழத்தி என்று குறிக்கும் இடங்கள் ஆகும். காமக்கிழத்தியரால் உலைவு பெறாத நிறை இன்பம் என நாட்டுப்புறக் குடும்ப வாழ்வு ஒன்றை அவள் குறிப்பிட்டாள். தன்னைக் குறிக்க அவள் வழங்கிய இன்னொரு சொல் ஒரு குற்றச் சாட்டாகவும் - அதே சமயம் அவள் பிரிவுத் துயரத்தை நன்கு சித்தரிப்பதாகவும் உள்ளது. அவள் பல கடிதங்களின் இறுதியிலும் போக்கிலும் தன்னை “உன் விதவை லாரைன்” என்று குறிக்கிறாள். உயிருடனிருந்தும் உடனிராத அவன் வன்கண்மையை இது நயத்துடன் எடுத்துக் காட்டுகிறது.

று

அவள் துயரம், அவள் காதலார்வம், உள்ளத்தூய்மை, கற்பு உரம் ஆகிய யாவற்றையும் ஒரு கடிதம் படம் பிடித்துக் காட்டுகிறது.“உலகில் யாவும் நிலையற்றது - உங்களையும் உங்கள் காதலையும் தவிர ..கடவுளைத் தவிர என்றார் சாலமன். ஆனால் என் கடவுள் நீங்கள் ஒருவரே; வேறு எந்தக் கடவுளையும் நான் அறிந்து கொள்ளவில்லை. உங்களுக்காக நான் படும் துன்பத்தில் ஓராயிரம் பங்கு நான் எந்தக் கடவுளுக்குப் பட்டிருந்தாலும் அந்தக் கடவுளின் துறக்கமும் அந்தக் கடவுள் நெறியின் திருநிலைத் தகுதியும் எனக்கு முழுவதும் கிடைத்திருக்கும்.... எனவே, நான் மிகவும் மோசமான கடவுளைத்தான் தேர்ந்தெடுத்