உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232) ||-

அப்பாத்துரையம் - 30

ஃபிரெஞ்சு அரசவைக் கோலத்தை அவள் மனித உணர்ச்சியுடன் கலக்க விரும்பியதுண்டு. ஆனால், அக்கோலத்தை அறுக்க முடியவில்லை. ஆகவே, தான் மக்கள் வெறுப்பலையிலும் போட்டி உயர்குடியினர் பொறாமையலையிலும் அவள் சிக்கவில்லை. ஃபிரஞ்சுப் புரட்சிக் கருத்துகளைக் கனவுருவில் ஓரளவு சுவைத்த அவள் அது நனவுருவெடுக்கத் தொடங்கியதே அதனைத் தெளிவாக வெறுத்து ஒதுங்கத் தொடங்கினாள்.

ஆனால், ஆக்டேவ் மூரட் நிலை இது அன்று. அவனும் உயர் குடியிற் பிறந்தவன்தான். ஆனால், அதன் இன்பக் கோலத்தை ஒழிக்க அவன் ஒருப்பட்டேயிருந்தான். அவன் மனிதனாக, தங்குதடையில்லாமல் வாழ விரும்பினான். உயர் குடியாட்சியை, மக்கள் துயரிடையே உயர்குடியினர் நடத்தும் இன்ப ஆட்சியை வீண் ஆரவாரச் செலவுகளை அவன் வெறுத்தான். ஆகவேதான் புரட்சியில் ஈடுபட்ட அறிஞர், கலைஞர்கள் உணர்ச்சிகள் அவனையும் இயக்கின. அவன் புரட்சித் தெய்வத்தின் புகழ் பாடினான். அவன் போக்கை லாரைன் வெறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால், அவள் தன்னாலி யன்ற மட்டும் எச்சரித்தாள். ஆக்டேவ் மூரட்டின் தொடக்க ஆர்வத்தை அது சிறிதும் தடைப்படுத்தவில்லை. ஆனால், அவனும் நீடித்துப் புரட்சிப் போக்குடன் ஒத்துப்போக முடியவில்லை. சமூகக் கருத்துகளையும் சமூக அமைப்பையும் எதிர்த்த அப்புரட்சி, சமூக அமைப்புடன் இணைந்த மனித உணர்ச்சிகளையும் நடைமுறை ஒழுக்கத்தையும் கூடத் தொடக்க வெறியில் மதியாது அழித்தது. இது மூரட்டைப் பெரிதும் புண்படுத்தியதனால் அவன் அதன் அழிவுச் சுழலில் இருந்து விலகவேண்டி வந்தது.

அவனுக்கு இப்போது வயது ஐம்பத்தொன்று. சமயப் பயிற்சி மாணவன், புனைகதையாசிரியன், வசைத்திறக் கவிஞன், இலத்தீனப் புலவன், நடிகன், விடுதலைப் படைவீரன், மனித யுணர்ச்சியுடனாண்ட ஆட்சியாளன் என்ற பல துறைகளில் அவன் மனித உலகுக்குப் பொதுவாகவும், புத்தார்வக் காதல் வேடனாகப் பெரும்பாலான பெண்மை உலகுக்கும், ஏழைபங்காளனாகப் பொது மக்களுக்கும் நன்கு தெரிந்தவனாயிருந்தான். ஒரே ஒரு பெண்ணுக்கும் கடவுளுக்கும் மட்டுமே அவன் முழுநிறை காதல்