உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

II-

அப்பாத்துரையம் - 30

நின்றிருந்தனர். ஓரிடத்தில் புதுமைக் கிளர்ச்சியிலீடுபட்ட பெண்கள் கூட்டம் “வாழ்க ஆர்லியன்ஸ் கோமான்” என்று கத்திற்று. அது அவளுடைய பழங் காதலனின் பெயராதலால், அது அவள் நெஞ்சை ஊடுருவி அறுத்தது. மக்களின் ஆரவாரத் தினிடையே பாரிஸ் புகுந்த அந்நங்கைக்கு இவ்வரவேற்பு அவள் வருங்கால இன்னல்களை முன்னறிவிப்பவையாக தோன்றின.

மன்றத்தில் மன்னருக்கு எதிர்ப்பு தொடக்கத்திலிருந்தே மிகுதியாயிருந்தது. மன்னர் பெருமக்கள் உதவியை நாடினார். இது நிலைமையை இன்னும் மோசமாக்கிற்று. பொதுமக்கள் பெருமக்கள் எதிர்த்து ஆரவாரம் செய்தனர் சற்றுப் பொறுமை இழந்த மன்னர் மன்றத்தை இனி கூட்டாமலே ஆளப்போவதாக உறுக்கினார். இது உண்மையில் எதிர்ப்பு வேகத்தைப் பெருக்குவ தாக முடிந்தது. அரசியலமைப்பையே மாற்றிச் சட்டமமைத் தன்றிக் கூட்டங் கலைய விடுவதில்லை என்று மன்ற உறுப்பினர் முடிவு செய்தனர். மன்னர் மீது சீற்றம் பொங்கி ஆரவாரித்தது.

இச்சமயம் லாரைனுக்கும் ஆக்டேவ் மூரட்டுக்கும் பெருத்த வாக்கு வாதம் ஏற்பட்டது. இத்தடவை வாக்கு வாதம் வழக்கம் போலக் காதல் பற்றியதாயில்லை. அரசியல் தொடர்பு பற்றியதாக இருந்தது. மன்னனரையே எதிர்க்கத் துணிந்த மன்றத்தில் மூரட் இன்னும் ஏன் இருக்க வேண்டும் என்று அவள் வாதாடினாள். ஆனால், மன்றத்திலிருந்து விலகுவதால், மன்னர் நிலையில் மாறுதல் ஏற்படாது என்ற காரணம் காட்டி அவன் அங்கேயே இருந்தான்.

உள்ளே இருந்த கொந்தளிப்பு வெளியே மக்கள் கடலிடையே இன்னும் பெருத்த கிளர்ச்சியைத் தூண்டிற்று. அதன் முழக்கம் நகரினின்று தொலைவிலுள்ள லாரைன் மாளிகைவரை எட்டியது. கடைத்தெருவில் கடைகள் கொள்ளை யிடப்பட்டன. பணக்காரர் மாளிகைகளும் உயர்குடியினர் அரண்மனைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. கட்டுமீறிய கிளர்ச்சிக்காரர் அரசன் ஆட்கள், பெருமக்கள் என்று ஐயுறவு கொண்டவர்களையெல்லாம் வெட்டியும் மிதித்தும் அடித்தும் வீழ்த்திச் சென்றனர். பெண்கள் கூக்குரல் ஒருபுறம் சிறுவர் சிறுமியர் அழுகுரல் ஒருபுறம் கிளர்ச்சிக்காரர் ஆரவாரத்தையும் மீறிக் கிலியூட்டியது.