உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

(235

மூரட் வெர்ஸேல்ஸில் கூடிய மன்றத்தில் ஆர்வத்துடன் வாதஞ்செய்து கொண்டிருந்தான். அதே சமயத்தில் வெளியே சென்றிருந்த அகஸ்டி என்ன நேருமோ என்ற கவலையுடன் லாரைன் மாளிகையினுள் துடிதுடித்துக் கொண்டிருந்தாள். ஆனால், நெடுநேரம் அகஸ்டியைப் பற்றிக் கவலை கொள்வதற் கின்றி, சந்தடி அவள் இல்லத்தினை அணுகுவது கேட்டாள். அச்சத்தால் அவள் வாயில்களையும் பலகணிகளையும் அடைத்து உள்ளே அஞ்சி ஒடுங்கிக் கிடந்தாள். கிளர்ச்சிக் காரர்கள் பந்தமேந்தித் தெருவில் ஆர்ப்பரித்துச் சூழ்வரை ஒளியாலும் கம்பலையாலும் அவள் அறிந்து நடுங்கினாள். அவள் தோட்டங்களில் மக்கள் வெள்ளம் புகுந்து அழிவு செய்தது. பலர் வாயில்களையும் பலகணிகளையும் கல்லால் தாக்கினர். பலகணி விளிம்பு வழியாக நோக்கிய போது அவள் கண்களை அவளால் நம்பமுடியவில்லை. பிச்சைக்காரர் நிலையிலுள்ள நடுத்தரக் குடும்பப் பெண்டிர் கையில் சுத்தியும் தடியும் கல்லும் ஏந்தித் தலைவிரி கோலமாகப் பேய்கள் போல் அலறிக்கொண்டு பாய்ந்தனர். அவளால் இத்தோற்றத்தைத் தாங்கமுடியவில்லை. கண்ணை உள்ளே இழுத்துக் கொண்டாள். ஆனால், விழிப்பு நிலையிலும் அக்கோரக் காட்சி அவள் மனத்தை விட்டு அகலாது பீதியுறுத்தியது. இரவுமுழுதும் அவள் உறக்கம் இத்தகைய காட்சிகளும் காட்டு விலங்குகளும் நிறைந்த ஒரு கனவுக் கோவையாயிருந்தது.

மறுநாள் காலையில் அவள் தன் அணிகளில் முக்கியமான வற்றை மட்டும் தன்னுடலிலேயே மறைத்துக் கொண்டு வீட்டைத் தன் தலைமை வேலையாளின் பொறுப்பில் விட்டுவிட்டு நகரைவிட்டு வெளியேறினாள். சிலநாள் நாட்டுப் புறத்தில் தங்கிப் பின் ஸ்விட்ஸர்லாந்தில் சென்று தங்கினாள். ஆக்டேவ் மூரட்டை உடனழைத்துச் செல்வது வீண் என்பது அவளுக்குத்தெரியும். அதற்கு நேரமுமில்லை - அவனுக்குக் கடிதம் எழுதக் கூட அவளுக்குப் போதிய அமைதியில்லை. விரைந்த விளங்காத கையெழுத்துடன் அவள் சிறு துண்டு எழுதி அவனுக்குக் கொடுக்கும்படி வைத்துச் சென்றாள். “ஜூலை, 13. திங்கள் 11 மணி : புயல் பொங்கி வருகிறது. இனிக் காலதாமதம் செய்வது பேரிடர் தரக்கூடும். இப்போதே நிலைமை முற்றிவிட்டி ருக்கக்கூடும். ஆனால், உங்களைப் பற்றி எதுவும் அறியாமல்