உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

அப்பாத்துரையம் - 30

போவதா? அதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆயினும், அகஸ்டியை நினைத்து நான் ஓட வேண்டியவளாகிறேன். கொலையும் கொள்ளையும், வஞ்சனையும் கொடுமைகளும் நிறைந்த இச்சூழ்நிலையில் தீங்குகள் வராமல் எச்சரிக்கையாய் இருங்கள். தங்களுக்காக ஆயிரமடங்கு கவலைப்படும் இந்தத் தங்கள் மனையாட்டியைக் குறித்து - சிந்தியுங்கள். இதோ நான் தங்கள் எண்ணத்தை நெஞ்சிலிருந்து எடுத்தெறிந்து செல்ல வேண்டியிருக்கிறது.""

பாஸ்டில் சிறை வீழ்ந்தது - மன்னர் இதைக்கேட்டதும். “ஆ, இது என்ன, அரசியலுக்கு எதிரான கிளர்ச்சியா?” என்றனராம். அந்த அளவு சூழ்நிலையை அவர் உணராதவராயிருந்தார். அருகிலிருந்த ஒருவர் “கிளர்ச்சியல்ல அரசே, புரட்சி" என்றனர். அந்தச் சொல் - அதுவரை உலக மக்களுக்கு வெறும் சொல்லா யிருந்தது; இப்போது அவர் நேரடி அனுபத்தால் புதுப்பொருள் விளக்க இருந்தது. அவர்கள் பொன்னுலகு அழிவுற்றது. மக்களிடம் அதனிடமாக வாக்களிக்கப்பட்ட பொன்னுலகை எங்கும் காண வில்லை. இடையே நகைத்தீ புகைக்கும் குழம்பாறாக ஓடிற்று.

மூன்று நாட்கள் கழித்து நிலைமை ஆக்டேவ் மூரட்டின் நம்பிக்கைகளையும் குலைத்தது. இருவரும் ஒரு ஒதுக்குப்புறத்தில் குடிசை கட்டிவாழ்ந்தால் என்ன என்ற திட்டம் இப்போதும் அவன் மனக்கண்முன் நிழலாடியது.

பாரிசை மறப்போம்

இதன் இன்ப வாழ்வைத் துறப்போம்,

கலை பெரிதே

ஆனால் இயற்கை அதனிடம் அரிதே

காதலும் நீயும் கவினுற உலவும்

காட்சியே எனது கருத்திடை நிலவும்

இன்பம், பிறவெலாம் துன்பம்!

என்று பாட்டிசைத்தனுப்பினான். புறப் புயலிடையேயிருந்து அவன் அகப் புயலிடையே வந்து விழுந்த நறுமலராயிருந்தது அது அவளுக்கு!