உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 30

240 ||- தூய்மைப்படுத்துகிறது - இறைவன் ஒளியுடன் அது எத்தனை நெருக்க முடையது.கொடுப்பவனையும் உயர்த்திப் பெறுபவனை யும் உயர்த்தும் இந்நற்செயல் தழைக்கவாவது உலகில் ஏழையும் செல்வரும் இருப்பது நல்லதென்றே எண்ணுகிறேன்" என்று லாரைன் தன் உள்ளார்ந்த புரட்சி எதிர்ப்புக்கு விளக்கம் தருகிறாள். அந்தோ! செல்வர் விருப்பம் இது. ஏழைகள் இதே விருப்பம் உடையவராயிருந்தால், தாம் செல்வராகவும் பிறர் ஏழையாகவும் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவர் என்பதை லாரைன் நினைத்துப் பார்க்கவில்லை!

அடுத்த ஆண்டு புரட்சி வேகத்தில் சிறிது ஓய்வு காணப் பட்டது. துடிப்பும் படபடப்பும் ஆர்வமாக நிலவிற்று. மன்றம் எல்லாம் பட்டம் பதவிகளையும் நீக்கும் தீர்மானம் நிறைவேறிற்று. லாரைன் “இனி நான் கோமாட்டி சிராம்மோனல்ல; நீங்களும் இப்போது வெறும் திருவாளர் மூரட் தான். ஆகவே, நம் சமத்துவத்தைப் புரட்சி மன்றம் ஏற்படுத்திவிட்டது” என்று பாதி கேலி கலந்த களிப்புடன் கூறினாள். நிலைமை சரிப்பட்டு விட்டது என்ற எண்ணத்தில் லாரைன் இப்போது பாரிஸுக்கே மீண்டு வந்தாள். ஆனால், அடுத்த ஆண்டு தொடங்கியும் பழைய படி புதிய கார்முகில்கள் தோன்றின.

லாரைனுக்குத் தனிப்பட்ட அச்சுறுத்து வேறு ஏற்பட்டது. ஏனெனில், சிறை உடைத்தபோது வெளிப்பட்ட ஆசிரியர் பெர்னார்டு இப்போது புரட்சித் திரைக்குள் புகுந்து அதன் சீற்றத்தைக் கிளறி அவனைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தார். புரட்சியியக்கம் போய்க் கொண்டிருந்த போக்கில் யார் வேண்டுமானாலும் எவரை வேண்டுமானாலும் தாக்கி அழிக்க மக்கள் சீற்றத்தைப் பயன்படுத்தலாம். லாரைன் மீண்டும் வெளிநாடு செல்ல எண்ணமிட்டாள். ஆஸ்டிரியா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளிலுமிருந்து நண்பர்கள் “எங்கள் மனை உங்களது. இங்கு வந்து எம்மைப் பெருமைப்படுத்துக” என்று அழைப்பு விடுத்தனர். அவள் சிறிது தயக்கத்தின்பின் பெர்லினில் வாழ்ந்த இளவரசர் ஹென்றியின் அழைப்பை ஏற்றனள். மன்னர், அரசி உறவினர் பல பெருமக்கள் ஏற்கனவே வெளிநாடுகளை நோக்கிப் புறப்பட்டனர். விரைவில்