வாடா மல்லி
241
பாரிஸிலிருந்து வெளிநாடு செல்லும் மக்கள் அணி ஒரே சங்கலித் தொடராய்ச் சென்று கொண்டேயிருந்தது.
1891 மே 14-இல் லாரைன் தன் காதலன் மூரட்டினிடமும் மகளிடமும் மருமகன் அர்மந்திடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு பெர்லின் புறப்பட்டாள். அத்தடவை அவள் பிரிவை ஒவ்வொரு சிறு பொருளும் தடைப்படுத்துவதாக அவளுக்குத் தோற்றிற்று. ஒவ்வொருவரிடமிருந்து பிரியும்போதும் அவள் மனம் தனித்தனி கவலையுற்றது. இதற்குக் காரணம் என்னவென அவள் மதித்துணர முடியவில்லை. ஆனால், இப்பிரிவு உண்மையில் பலவகையில் பலரிடமிருந்தும் பல பொருள் களிடமிருந்தும் நிலையான பிரிவாகவே முடிந்தது என்பதை அவள் பின்னர் தன் அறிய முடிந்தது. புரட்சித் தீ அவள் சுற்றுச்சார்பு முழுவதையும் மாற்றிற்று. மருமகனை அவள் கண்டது அதுவே கடைசி. அவள் திரும்பி வரும்போது அருந்த உலகம், காட்சி, ஆட்கள் ஆகிய யாவற்றிலும் பெருமாறுதல் ஏற்பட்டன.
ஆகவே, சாவை விட்டுச் செல்லும் உயிர்போல அவள் பிரிவுற்றது பின்னாட்களின் நிலைநோக்கப் பொருத்தமேயாகும்.
அவள் பெரிய பயண வண்டியில் வருவாள். பெருந்திரள் பணியாட்கள், துணையாட்கள் புடைசூழ வருவாள் என்று இளவரசன் ஹென்றி எதிர் பார்த்திருந்தான். ஆகவே, தன் வண்டியுடன் மிகையாக ஏழு குதிரைகள் இட்டு வந்திருந்தான். லாரைன் பளுவற்ற சிறு வண்டியில் ஏழு குதிரைகள் பூட்டியதும் அது காற்றாய்ப் பறந்தது.
இவ்வாண்டு ஜூனில் மன்னனும் அரசியும் குற்றவாளிகள் போல் அடைபட்டிருந்த இடத்திலிருந்து தப்பியோட முயன்று நேரிடையாகவே பெருங் குற்றவாளிகளாகப் பிடிபட்டனர்.
மூரட்டுக்குப் புரட்சி மீதிருந்த ஆர்வமெல்லாம் இதற்குள் ஆவியாய்ப் பறந்து போயிற்று. லாரைன் தந்த எச்சரிப்பும் அறிவுரையும் இப்போது அவனுக்கு முற்றிலும் சரி எனப்பட்டது. ஆகவே “என் வாழ்க்கை முற்றிலும் ஒரே தோல்வி மயமாய்ப் போய்விட்டது - உன் காதலொன்றைத் தவிர... அதையே நாடி தவிர...அதையே வருந்துகிறேன்" என்று எழுதினான்.