உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. ஐம்பதும் அறுபதும்

முதலில் லாரைனை வருக, வருக என்றழைத்த ஹென்றி இளவரசன் அதே ஆர்வத்துடன் 1791இல் மூரட்டையும் வர வழைத்தான். நீண்டநாள் இயற்கைச் சூழ்நிலையினாலும் தத்தம் மனப்போக்குகளாலும் பிரிந்திருந்த காதலர் இருவரும் வாழ்க்கையின் மாலைப் போதில் ஒருங்குகூடி வாழ்ந்தனர் ஆனால், அவர்கள் கூடிய நேரம் அவர்கள் தாய்நாட்டின் வாழ்விலிருந்து அவர்கள் பிரிவுற்ற நேரமாயிருந்தது. அவர்கள் ஒருங்கே பங்குகொண்டது காதல் பிரிவுத் துயரைத்தான். ஆனால், அவர்கள் தாய்நாட்டுத் தோழர் பலரின் துயர்களைப் பார்க்க அவர்கள் துயர் குறைவே.

காதலர்களைப் பிரித்த புரட்சி அவர்களை இணைத்தது. பகட்டாரவார வாழ்வை ஒழித்த புரட்சி அவர்கள் பகட்டார வாரமற்ற வாழ்க்கையைத் தீண்டவே இல்லை. உண்மையில் பட்டம் பதவிகள் நெப்போலியனால் ஒழிக்கப்பட்டபோது இருவரிடையேயும் சமூக அடிப்படையில் இருந்த ஒரு பிரிவுத் தட்டி அகற்றப்பட்டதாகவே அவர்கள் எண்ணினர். அவர்கள் பொருளியல் வாழ்வு தகர்ந்தது; காதல் வாழ்வு மலர்ந்தது. இளைஞர் காதலைக் கலைத்த புரட்சி இங்ஙனம் அவர்களுக்கு முதுமையில் காதலின் இன்கனிவளம் நல்கிற்று.

மூரட்டுக்கு இப்போது 59 ஆண்டுகள் நிறைவுற்றன. லாரைனுக்கு நாற்பத்தெட்டாண்டுகள் கழிந்தன. சுற்றத்தார், நண்பர், தோழர் பலர் அவர்கள் அருகிலிருந்து மறைந்தனர், அல்லது தொலை சென்று பிரிந்தனர். அவர்கள்மீது இதன் தடமும் காலத்தின் தடமும் பொறிக்கப்பெற்றே இருந்தன. ஆனால், இருவர் உள்ளத்தின்மீதும் இளமையின் சாயல் மறையவில்லை-அது மேன்மேலும் பொலிவுற்றது.சிறப்பாக மூரட் பேச்சும் நடையும் முகத் தோற்றமும் இளமையைக் கழித்துவிட்ட