உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

“ஆம், நான் உங்களைக் காதலிக்கிறேன்.”

247

ச்

எல்லாக் காதல் கதைகளுக்கும் ஏற்படும் இயல்பான முடிவு இது. இந்த “ஆம்” என்ற சொல்லின் மறுபடிவமே மண வினையில் மணப்பெண் இதழிலிருந்து மீண்டும் “ஆம்” என்ற உருவம் பெறுகிறது. அடிலியின் திருமணத்தின்போது லாரைன் இச் சொல்லைப் பற்றி முதல் முதலாகச் சிந்தித்திருந்தாள். தானும் ஒருமுறை இதனை முன்பு கூறியிருந்தாலும், அது காதலறியாக் குழந்தைப் பருவத்துக் கதையாக அவளுக்குத் தோற்றிற்று. இப்போது பிள்ளையும் பேரனும் வந்ததன்பின் அவள் வாழ்வில் இதே காதல் வளையம் மீண்டும் சூழ்ந்தது.

அவள் மூரட் இப்படி மீண்டும் தன் காதல் வாழ்வை தொடங்க வேண்டுமென்று விரும்பினாள். விருப்பம் கனவாயிற்று. கனவு கற்பனையாக உருவெடுத்தது. இறுதியில் அது சிறிது சிறிதாக அவள் உள்ளுலகில் செயல் திட்டமாக வளர்ந்தது. அதன் நிறை வேற்ற அவள் நாளும் ஓரையும் வரையறுத்து விட்டாள். இடம் நிகழ்ச்சி வரிசையாவும் ஒழுங்குபடுத்தப் பெற்றன. ஆனால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இருவரில் ஒருவர் - முக்கியமான செயல் செய்யப்பட வேண்டியவர் ஒருவருடன் கலக்காமலே திட்டமும் நிறைவேறிச் செயலும் தொடங்கிற்று. அந்த ஒருவர் ஆக்டேவ் மூரட் தான் என்று கூறத் தேவையில்லை.

அன்று அவள் தன்னை மணப்பெண்ணென உடுத்தி அணிமணி ஒப்பனை செய்து கொண்டாள். அதைக் கண்டு மூரட் ஏன் இந்த ஒப்பனை யென்றான். அவள் “இன்று நம் காதல் மணம் நிறைவேறிய நாள். இன்று காதலராக உடுத்துக் கொண்டு தோட்டத்தில் உலவி வருவோம்” என்றாள். அவனும் “சரி” என்று உடையுடுத்தி வந்தான். ஆனால், அவள் முகத்திலுள்ள களிப்பும் குறும்புநகையும் கண்டவுடன் அவன் “என்ன, புதிய செய்தி ஏதேனும் உண்டா?" என்றான்.

“எனக்கென்ன தெரியும்? என்னை நீங்கள் தோட்டத்திற்கு இட்டுச் செல்கிறீர்கள். அழைத்துச் செல்கிறீர்கள். என்ன உட்கருத்து வைத்திருப்பீர்களோ, யார் கண்டார்” என்றாள்.

அவள் ஏதோ திட்டமிட்டிருக்கிறாள் என்பதை அவன் உய்த்துணர முடிந்தது. அது என்ன என்று அப்போதும் அவனுக்குப் புரியவில்லை.