37. வின்ஸ்லோப் பண்ணை
பெர்லினில் பெரும்பாலும் மெர்க்காட்ஸில் மூரட்டுக்கு உடலுழைப்பற்ற சோம்பல் வாழ்வே வாழ வேண்டியதாயிருந்தது. நாடோடியாக வளர்ந்த அவனுக்கு அதன் கட்டுப்பாடு மிகவும் தொல்லையாக இருந்தது. இப்போது வின்ஸ்லோவில் அவனுக்கு வாய்ப்புக் கிடைத்ததுமே அவன் உழைப்பாளிகளுடன் உழைப் பாளியாய் இருந்து உழைத்தான். அவன் பண்பறிந்து லாரைன் இதில் அவனை ஊக்கத் தவறவில்லை. வின்ஸ்லோப் பண்ணையில் அவர்கள் நாடு பெயர்ந்த ஃபிரெஞ்சுப் பெருங்குடி மக்களைக் கொண்டு வந்து பிரஷ்ய அரசன் இணக்கம் பெற்றக் குடியேற்றினர். உயர் குடியிலிருந்து வீழ்ச்சியுற்றும்
ன்ப
வாழ்க்கை யே நாடிய அந்த ஃபிரெஞ்சுக் குடியேற்றம் நீண்டநாள் வெற்றிகரமாக நடக்கமுடியவில்லை. ஆனாலும் எல்லார் உழைப்பையும் தான் நின்று பொது மக்களைத் தூண்டி மூரட் சிலகாலம் அதனை வளமுடையதாக வைத்துப் பேணினாள். பொது மக்கள் அவனையும் அவனைப் போலவே அரும்பண்பு படைத்த அவன் துணைவி லாரைனையும் போற்றிப் புகழ்ந்தனர். தகுதி பற்றி எழுந்த இப்புகழ் மீதுகூட உயர்குடி மக்களுக்குப் புழுக்கமும் பொறாமையும் ஏற்பட்டது. ஒவ்வொருவராகக் குடியேறிவர் விலகலாயினர்.பண்ணை முன் போல் குடியானவர் உரிமைக்குள்ளேயே நின்றது.
“நம் காதல் வாழ்வில் காணாத ஒரே ஒரு இன்பத்தை இன்று மணவாழ்வு நமக்குத் தங்குதடையின்றித் தந்துள்ளது. முன்பெல்லாம் எப்பொழுது விடிந்துவிடுமோ என்று அஞ்சியஞ்சிச் சாவோம். ஏனெனில், விடியற்காலம் நமக்கு பிரிவுச் சின்னமாயிருந்தது. இப்போது அந்த அச்சமில்லை. இது மண வாழ்வின் மகத்துவம்” என்று ஒரு நாள் லாரைன் தன் தற்போதைய வாழ்வின் நலம் பாராட்டினாள்.