வாடா மல்லி
253
அவர்கள் பேச்சு அடிக்கடி நெப்போலியன் வந்த போதுதான் அவர்கள் இருவரிடையே வேறுபாடு விளைவித்த உயர்குடிப் பட்டம், செல்வம் ஆகியவை தகர்ந்து, அவர்கள் மணவினைக்கு வழிவகை ஏற்பட்டது. இது அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட நன்மை. இது போக மூரட், லாரைன் ஆகியவர்களின் அனுபவம் ஆராய்ச்சியால் வேறு பல நன்மைகள் புலப்பட்டன. உயர்குடியினருக்குப் பெருஞ் செல்வம் முன்பு பல வகையில் ஒரு பெருஞ் சுமையாகவே இருந்தது. மூத்தவனைச் செல்வம் சாரும். அவன் அதைத் தனியே வைத்துக்கொண்டு கொடுங்கோலாட்சி செய்ய வேண்டும். மற்ற இளவல்களோ செல்வமில்லாமலே அச்செல்வ மதிப்பைக் காக்க வழி காணவேண்டும். அதாவது போர் முதலிய துறைகளில் பயிலப்பெற்று, பிற கொடுங் கோலாட்சிகளுக்கு வலுத்தந்து வாழ வேண்டும். பெண்களோ வெனில் போதிய செல்வர் கைக்குக் காத்திருக்க வேண்டும். அழகின்மை, பொருளின்மை காரணமாக அது கிடைக்கா விட்டால் அவர்கள் தம் நிலைவிட்டு இறங்கி மணம் செய்யவோ, அல்லது தொழிலிலீடுபடவோ முடியாது. ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது மதிப்போடு உயிருடன் தற்கொலை செய்து கொள்வது போலக் கன்னி மடங்களில் கன்னித்துறவியாகச் செல்ல வேண்டும். நெப்போ லியன் புதிய ஆட்சி உயர் குடியினருக்குப் பொதுமக்கள் வாழ்வின் உரிமைகள் வழங்கிற்று.
மூரட்டின் இவ்விளக்கம் லாரைனுக்குக் கூடப் பிடித்த மாயிருந்தது.புரட்சியை வெறுத்த அவள் இப்புரட்சிக் கருத்தை வெறுக்க முடியவில்லை. காதல் அக்கருத்தை அவளிடம் இயல்பாகவே புகுத்தியிருந்தது.
புரட்சித் தீக்கு இரையாகி வாடி வதங்கி யழிந்த மலராகிய அரசியிடம் லாரைன் இன்றும் பற்றுடையவளாய் இன்றும் அவள் இனிய பண்புகளை நினைந்து வருந்தாமலில்லை. ஆனால், மூரட் அவளை இதற்காகக் கடிந்துகொண்டான். அவள் குற்றம் இன்ப நாட்டம் மட்டுமல்ல. மட்டற்ற இன்ப நாட்டமும், பொது வாழ்வு, அரண்மனை வாழ்வு ஆகியவற்றின் தகுதியை அவமதித்ததும் அவளிடம் மன்னிக்க முடியாத குற்றங்களென அவன் எடுத்துக் காட்டினான். “மன்னர் முன்னிலையிலேயே